7 - செவேன் இயக்குனர் நிசார் ஷாபி இயக்கத்தில் ரஹ்மான், ரெஜினா கேஸ்சன்றா, நந்திதா ஸ்வேதா, மற்றும் பலர் நடித்துள்ள திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளரும் இப்படத்தின் கதையாசிரியருமான ரமேஷ் வர்மா பெண்மேட்ச தயாரிக்க, இசையமைப்பாளர் சாய்த்தான் பாரட்வஜ் இசையமைத்துள்ளார்.
கதை
காவல் துறையில் ரகுமான் உதவி கமிஷனர் ஆகா பணியாற்றி வருகிறார். இவரிடம் தன் கணவரான ஹவிஷ் என்பவரை காணவில்லை என்று நந்திதா ஸ்வீதா வழக்கு ஒன்று தொடர்கிறார். வழக்கை விசாரிக்கும் ரகுமான், ஏற்கனவே இவரை போன்றே தன் கணவரை காணவில்லை என்று அனிஷா அம்ரோஸ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது தெரியவருகிறது. இதனை தொடர்ந்து ஐராபாத்-திலும் ஒரு பெண் தன் கணவரான ஹவிஷ் என்பவரை காணவில்லை என்று வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது தெரியவருகிறது.
இதன் தொடர்பாக ஹவிஷ் என்பவரை கைது செய்யும் காவல் துறை இவரை விசாரிக்கின்றனர். எனக்கும் அந்த மூன்று பெண்களுக்கும் எவ்வீத தொடர்பும் இல்லை என்று கூறிவருகிறார் ஹவிஷ். காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஹவிஷ் என்பவரை கொலை செய்ய முயற்சிகள் நடக்கின்றனர். இறுதியில் ஹவிஷ் மற்றும் ஆறு நாயகிகளுக்குள் என்ன தொடர்பு? இவரின் செயல்களுக்காண காரணங்கள் யாவை? என்பதே கதை.