777 சார்லி இயக்குனர் கிரன் ராஜ். கே இயக்கத்தில் பாபி சிம்ஹா, ரக்ஷித் ஷெட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் உருவாகி ஒரு பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் நோபின் பால் இசையமைத்துள்ளார்.
777 சார்லி திரைப்படத்தின் கதை
சிறு வயதிலேயே விபத்து ஒன்றில் பெற்றோரையும் குடும்பத்தையும் இழந்து விடுகிறார் நாயகன் தர்மா (ரக்ஷித் ஷெட்டி). தனிமையில் தன் போக்கில் வளர்ந்து வரும் தர்மாவிடம் வந்து ஒட்டிக் கொள்கிறது ஒரு குட்டி பெண் நாய். ஆனால், அவனுக்கு அது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. ஆனாலும், அவனை விடாமல் அவன் கூடவே பழக ஆரம்பிக்க அவனும் அதை தன்னுடன் இருக்க அனுமதிக்கிறான். ஒரு கட்டத்தில் அந்த நாய்க்கு புற்றுநோய் என்பது தெரியவர அதன் கடைசி ஆசையை நிறைவேற்ற நாயகன் மேற்கொள்ளும் பயணம் தான் இந்த 777 சார்லி படத்தின் கதை.