ஆ கதை

    2014-ம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திகில் திரைப்படம். இப்படத்தின் கதாப்பாத்திரங்களாக கோகுல், மேக்னா, பாபி சிம்ஹா, பாலா சரவணன் ஆகியோர் நடிக்க  ஹரி ஷங்கர் மற்றும் ஹரிஸ் நாராயணன் இயக்கியுள்ளனர். இத்திரைப்படம் ஜப்பான், துபாய், வங்காள விரிகுடா, ஆந்திரா, மற்றும் தமிழ் நாடு ஆகிய இடங்களில் படபிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. 

    கதை 

    மூன்று நண்பர்கள் (கோகுல், மேக்னா, சரவணன்) ஆகியோர் பாபி சிம்ஹாவிடம் பேய் உள்ளது என்று பந்தயம் கட்டுகின்றனர். அதனால் பேய் உள்ளது என்பதை நிரூபிக்க பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர். அவர்களுக்கு பேய்யின் அனுபவம் கிடைக்கின்றது. ஆனால் அதனை நிரூபிக்க முடியாமல் போகிறது.

    இதற்கிடையில், மேக்னாவின் காதலர் அஜய் ஒரு விபத்தில் இறக்கிறார்.அவரின் வீடியோ பதிவில் ஒரு பேயினால் தான் அனைவரும் இறந்தனர் என்று கூறியிருந்தார். அதற்கான சாட்சியை தேடும் பொழுது  அம்மூவருக்கு என்ன ஆனது? இறுதியில் பந்தயத்தில் வெற்றி பெற்றது யார்? என்ற அறியமுடியாத சஸ்பென்சுடன் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.
    **Note:Hey! Would you like to share the story of the movie ஆ with us? Please send it to us (popcorn@oneindia.co.in).