ஆருத்ரா பாடலாசியர், நடிகர், இயக்குனர் பா விஜய் தானே இயக்கி நடித்த அதிரடி த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தில் இவருடன் பாக்கியராஜ், மொட்டை ராஜேந்திரன், எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.
கதை :
சென்னை வேளச்சேரியில் பழமையான கலைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருக்கிறார் சிவா (பா.விஜய்). மாமா வில்ஸ் (ஞானசம்பந்தம்), தங்கை பார்வதி (மெகாலி), அவருடைய மகன் என ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். இடையிடையே பள்ளிகளுக்கு சென்று, குட் டச் பேட் டச் பற்றி வகுப்பு எடுக்கிறார் சிவா. இவர்களது அப்பார்ட்மென்டிற்கு குடும்பத்துடன் குடிவருகிறார் பிரைவேட் டிடக்டிவ் ஆவுடையப்பன் (கே.பாக்யராஜ்). இதற்கிடையே சில முக்கிய புள்ளிகளை சம்ஹாரம் செய்கிறார் ஒரு நபர். இதனை கண்டுபிடிக்கும் பொறுப்பு பாக்யராஜிடம் ஒப்படைக்கப்படுகிறது. கொலை செய்யும் நபர் யார், ஏன் இந்த கொலைகளை செய்கிறார், அந்த மர்ம நபரை பாக்யராஜ் கண்டுபிடித்தாரா என்பதே மீதிக்கதை.