X
ஆருத்ரா

ஆருத்ரா

Action | 31 Aug 2018 | U/A |
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

ஆருத்ரா கதை

ஆருத்ரா பாடலாசியர், நடிகர், இயக்குனர் பா விஜய் தானே இயக்கி நடித்த அதிரடி த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தில் இவருடன் பாக்கியராஜ், மொட்டை ராஜேந்திரன், எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். கதை :  சென்னை வேளச்சேரியில் பழமையான கலைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருக்கிறார் சிவா (பா.விஜய்). மாமா வில்ஸ் (ஞானசம்பந்தம்), தங்கை பார்வதி (மெகாலி), அவருடைய மகன் என ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். இடையிடையே பள்ளிகளுக்கு சென்று, குட் டச் பேட் டச் பற்றி வகுப்பு எடுக்கிறார் சிவா. இவர்களது அப்பார்ட்மென்டிற்கு குடும்பத்துடன் குடிவருகிறார் பிரைவேட் டிடக்டிவ் ஆவுடையப்பன் (கே.பாக்யராஜ்). இதற்கிடையே சில முக்கிய புள்ளிகளை சம்ஹாரம் செய்கிறார் ஒரு நபர். இதனை கண்டுபிடிக்கும் பொறுப்பு பாக்யராஜிடம் ஒப்படைக்கப்படுகிறது. கொலை செய்யும் நபர் யார், ஏன் இந்த கொலைகளை செய்கிறார், அந்த மர்ம நபரை பாக்யராஜ் கண்டுபிடித்தாரா என்பதே மீதிக்கதை.
Read More

ஆருத்ரா நடிகர்கள் & படக்குழுவினர்

ஆருத்ரா அணியின் தகவல்

இயக்குனர் பா விஜய்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை வித்யாசாகர்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஆருத்ரா விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
கவிஞர், பாடலாசிரியர், நடிகன் என தனது அடையாளங்களை வளர்த்து வரும் பா.விஜய்யின் இயக்குனர் அவதாரம் தான் ஆருத்ரா. இந்த படத்தை தயாரித்திருப்பதும் அவரே. முதல் படத்தை குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரானதாக எடுத்துள்ள பா.விஜய்க்கு பாராட்டுக்கள். பாடலாசிரியராக உச்சந்தொட்ட பா.விஜய்க்கு, நடிகனாக, இயக்குனராக மேலே உயர இன்னும் நிறைய படிகள் ஏற வேண்டி இருக்கின்றன. படத்தின் கதைக்கரு இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியமானது தான். ஆனால் அதை சொல்லியிருக்கும் விதம் தான் உறுத்தலாக இருக்கிறது. முதல் பாதி முழுவதுமே படம் ஏனோ தானோவென பயணிக்கிறது. சுமி மாமி, மொட்டை ராஜேந்திரன், பாக்யராஜ் காமெடி எல்லாம் 'கடுப்பேத்துறாங்க மை லார்டு' சொல்ல வைக்குது. ஆனால் இரண்டாம் பாதியில் வரும் பிளாஷ் பேக் காட்சிகள் மனதை உருக்குகின்றன. அதே நேரத்தில், பாலியல் தொடர்பான காட்சிகளை இவ்வளவு டீடெய்லாக காட்டியிருக்க வேண்டாம் பா.விஜய். இது எதிர்மறையான தாக்கத்தை உருவாக்கும் ஆபத்தும் இருக்கிறது. ஒரு படத்துக்கு திரைக்கதை மிக முக்கியம். அதில் கவனம் செலுத்த தவறியிருக்கிறார் இயக்குனர் பா.விஜய். எளிதாக யூகிக்கக்கூடிய வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால், திரில்லிங், சஸ்பென்ஸ் எல்லாம் முன்கூட்டியே உடைந்துவிடுகிறது. அதேநேரத்தில், ஸ்தபதி தொடர்பான காட்சிகள் நல்ல டீலெய்லாக இருக்கிறது. சஞ்சய்லோக்நாத்தின் ஒளிப்பதிவும், ஷான் லோகேஷின் எடிட்டிங்கும் தன்னால் முயன்ற வரை படத்தை தரம் உயர்த்த போராடியிருக்கின்றன.

ஆருத்ரா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஆருத்ரா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+