X
முகப்பு » பிரபலங்கள் » எஸ் ஏ சந்திரசேகர்
எஸ் ஏ சந்திரசேகர்

எஸ் ஏ சந்திரசேகர்

Actor/Director/Producer
பயோடேட்டா:  எஸ் ஏ சந்திரசேகர் இந்திய திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என திரைத்துறையில் பணியாற்றி வரும் பிரபலம். இவர் 1978-ஆம் ஆண்டு " அவள் ஒரு பச்சை குழந்தை " என்னும் தமிழ் திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக தமிழ் திரையில் அறிமுகமானவர். பின்னர் தனது படைப்புகளில் பல வித்தியாச காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் ரசிகர்களை கவரந்த இவர், தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம், மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் பணியாற்றி இந்திய அளவில் புகழ் பெற்ற பிரபலம் ஆவார்.   பிறப்பு   எஸ் ஏ சந்திரசேகர், தென்தமிழகம் ஆனா ராமேஸ்வரத்தில் பிறந்தவர், பின்னர் கோவையில் தஞ்சம் புகுந்து கோவையை இருப்பிடமாய் கொண்டு புகழ் பெற்றவர். தற்போது சென்னையில் பல திரைப்படங்களை இயக்கி பிரபலமாக வாழந்து வருகிறார்.   திரைப்பட தொடக்கம்   1978-ஆம் ஆண்டு " அவள் ஒரு பச்சை குழந்தை " என்ற தமிழ் திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர். ஆனால் இத்திரைப்படம் இவருக்கு வெற்றியை பெற்று தரவில்லை. பின்னர் 1981-ஆம் ஆண்டு " சட்டம் ஒரு இருட்டறை " என்ற திரைப்படத்தினை இயக்கி பிரபலமானார். இப்படமானது தமிழில் மிக பெரிய வெற்றியை பெற்று புகழ் பெற்றது. தனது திரைப்பட தொடக்க காலத்தில் இவர், தொடர்ந்து நடிகர் விஜயகாந்த்-யை நாயகனாக கொண்டு பல வெற்றி படங்களை இயக்கி புகழ் பெற்றார்.   திரை அனுபவம்   எஸ் ஏ சந்திரசேகர் தமிழ் திரைப்படத்தினை இயக்கி புகழ் பெற்ற இவர், பின்னர் கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் இயக்குனர் மற்றும் நடிகராக பணியாற்றி புகழ் பெற்றுள்ளார். 1981ஆம் ஆண்டு தெலுங்கிலும், 1982-ஆம் ஆண்டு கன்னட திரையுலகிலும், பின்னர் 1985-ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக அந்தந்த மொழிகளில் அறிமுகமானார்.   எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான பிரபல படங்கள்   சட்டம் ஒரு இருட்டறை நான் சிவப்பு மனிதன் சட்டம் ஒரு விளையாட்டு செந்தூரபாண்டி   பிரபலம்   எஸ் ஏ சந்திரசேகர், இந்திய திரைத்துறையில் அதிக ரசிகர்களை கொண்டு புகழ் பெற்ற நடிகராக திகழும்   "தளபதி"  விஜய் -யின் தந்தை ஆவார். நடிகர் விஜய் ஆரம்ப காலத்தில் நடித்த படங்களான ரசிகன், தேவா, விஷ்ணு, ஒன்ஸ் மோர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனரும் எஸ் ஏ சந்திரசேகர் ஆவார்.   திரைத்துறையில் புகழ் பெற்ற பாடகரான திருமதி. ஷோபா என்பவரை மணந்துள்ளார். திருமதி  ஷோபா  பாடகர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர் என இவரும் தமிழ் திரையுலகில் பணியாற்றி பிரபலமானவர்.   எஸ் ஏ சந்திரசேகர் இதுவரை நடிகர் விஜயகாந்த் உடன் 19 திரைப்படங்களிலும், நடிகர் விஜய்யின் 9 திரைப்படங்களிலும் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
மேலும் படிக்க

எஸ் ஏ சந்திரசேகர் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
தங்கர் பச்சன் 01 Sep 2023
எஸ் ஏ சந்திரசேகர் 03 Feb 2023

எஸ் ஏ சந்திரசேகர்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

எஸ் ஏ சந்திரசேகர்

பெயர் எஸ் ஏ சந்திரசேகர்
பிறந்த தேதி 02 Jul 1945
வயது 80
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

எஸ் ஏ சந்திரசேகர் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

எஸ் ஏ சந்திரசேகர் பிரபலம்

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

எஸ் ஏ சந்திரசேகர் வீடியோக்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+