ஆதித்ய வர்மா கதை

  ஆதித்ய வர்மா இயக்குனர் கிரீசாய இயக்கத்தில் துருவ் விக்ரம், பனித்த சந்து, பிரியா ஆனந்த் மற்றும் பலர் நடிக்கும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் முகேஷ் மெஹத தயாரிக்க இசையமைப்பாளர் ரதன் இசையமைத்துள்ளார். இப்படம் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக் படமாக உருவாகின்றது. இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக ரவி கே சந்திரன் பணியாற்றியுள்ளார்.
   
  இத்திரைப்படத்தின் இயக்குனர் கிரீசாய, தெலுங்கில் வெளிவந்த "அர்ஜுன் ரெட்டி" திரைப்படத்தின் இயக்குனர் சுதீப்பிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் 2019 மே 14 அன்று முடிவானது. மேலும் இப்படத்தின் எடிட்டிங் பணிகள் நடக்கிறது என படக்குழுவினர் 2019 ஆகஸ்ட் மாதம் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இத்திரைப்படத்தினை 2019 நவம்பர் 22-ல் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.


  ஆதித்ய வர்மா திரைப்படத்தின் கதை

  துருவ் விக்ரம் (ஆதித்ய வர்மா) மருத்துவ கல்லூரியில் படித்து வரும் இவர், படிப்பு மற்றும் விளையாட்டு என அனைத்திலும் சிறந்தோங்கி விளங்குகிறார். கல்லூரியில் சிறந்த மானவனாக இருக்கும் இவர் அதிரடியிலும் கலக்குகிறார். இதனாலே இவரின் மேல் அனைத்து மருத்துவ ஆசிரியர்களுக்கு கோபம் உள்ளது.

  அதே கல்லூரியில் முதலாம் ஆண்டில் இணைகிறார் நாயகி பனித்த சந்து, இவரின் தந்தை நாயகன் ஆதித்ய வர்மா தந்தையின் நண்பனும், தணிக்கையாளர் (ஆடிட்டர்) ஆவார். இந்த நட்பால் நாயகன் நாயகியுடன் பழகுவதற்கு ஒரு காரணமாக அமைகிறது. பின் கல்லூரியில் மிகவும் நெருக்கமாக காதலித்து வரும் இவர்கள் கல்லூரியை முடித்து வேளைக்கு செல்கிறார்கள்.

  இவர்களின் காதலை பற்றி அறியும் நாயகியின் தந்தை, நாயகிக்கு வேறு ஒரு மாப்பிளை பார்த்து திருமணம் செய்து வைக்கிறார். இதனால் காதல் தோல்வியில் மதுவிற்கு அடிமையாகும் நாயகன், நாயகியை மறக்க முயற்சி செய்து வருகிறார். மருத்துவராக ஒரு பெரிய மருத்துவமனையில் பணி செய்யும் இவர், சில தொந்தரவுகளுடன், மன நிம்மதி இல்லாமல் வேலை பார்த்து வருகிறார்.

  அங்கு ஒரு விபத்தில் சிக்கி மருத்துவத்திற்கு வரும் நடிகை பிரியா ஆனந்த் நாயகன் ஆதித்ய வர்மா மேல் ஒரு தலை காதல் கொள்கிறார். இதிலிலும் தோல்வியடைந்த நாயகன், மருத்துவமனையில் ஒரு அவரச சிகிச்சைக்கு குடித்துவிட்டு செல்கிறார். இதனால் சில தடைகள் ஏற்படுகின்றது. பின் அதனை சரி செய்கின்றனர் நாயகனின் குடும்பத்தினர்.

  ஒரு வழியாக அந்த போதை பழக்கத்தில் இருந்து வெளியேறும் நாயகன், எதிர்பாராவிதமாக நாயகியை ஒரு பூங்காவில் சந்திக்கிறார், அங்கு நாயகி கணவரால் கைவிடப்பட்டு 9 மாத கர்ப்பிணி பெண்ணாக அமர்ந்திருக்கிறார். இதனை கண்டு நாயகன் என செய்கிறார் என்பதே படத்தின் கதை.

  வர்மா 
  இத்திரைப்படமானது முதலில் 'வர்மா' என்ற தலைப்புடன் பாலா இயக்க, துருவ் விக்ரம், மேகா சவுதிரி, ரைசா வில்சன் நடித்திருந்தனர். இப்படத்தின் ட்ரைலர் ஜனவரி 9-ம் தேதி வெளியானது.

  பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து, இ4 என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் வெளியிட இருந்த நிலையில், முழு படத்தையும் பார்த்த இ4 என்டேர்டைன்மெண்ட் நிறுவனத்திற்கு திருப்தி அளிக்காத நிலையில் பிப்ரவரி 6-ம் தேதி அன்று இப்படத்தினை வெளியிடுவதில்லை என அறிக்கை வெளியிட்டனர்.

  மேலும் இத்திரைப்படம் மீண்டும் வேறு ஒரு இயக்குனர் மற்றும் நடிகர்களுடன் துருவ் விக்ரம்-யை கதாநாயகனாக வைத்து அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் எடுக்கப்பட்டு 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்படும் என தெரிவித்தனர்.
  **Note:Hey! Would you like to share the story of the movie ஆதித்ய வர்மா with us? Please send it to us (popcorn@oneindia.co.in).