எதிரி இயக்குனர் கே. எஸ். ரவிகுமார் இயக்கத்தில் நடிகர் மாதவன், விவேக், சதா மற்றும் பலர் நடித்துள்ள அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஜி.வி பிரசாத் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கதை
நடராஜன் ஐயர் (டெல்லி கணேஷ்) ஐயர் ஆவார். அவர் வீட்டில் மேல்பகுதியை வாடகைக்கு விடவும், அங்கு வரும் கல்லூரி மாணவர்கள் நல்லவர்களாக நடித்து அவர் வீட்டில் வாடகைப் பகுதியில் குடியமர்கின்றனர். பின்பு சாராயம், புகை பிடித்தல் போன்ற பல தொழில்களைச் செய்ய ஆரம்பித்தனர். இவற்றைப் பார்த்துப் பயந்துபோன நடராஜன் ஐயர் அவர்களை விரட்டுவதற்கு ஆட்டோ ஓட்டுனர் (விவேக்) ஒருவரின் உதவியை நாடுகின்றார். அவரும் பாட்டில் மணி என்ற ரவுடி இருக்கின்றான். அவன் உங்களுக்கு உதவுவான் என்று பொய் கூறி அவரிடம் இருந்து பணம் வாங்குகிறார்.
அதன்படி பாட்டில் மணியாக தன் நண்பன் சுப்பிரமணியை (மாதவன்)ஏற்பாடு செய்கின்றார். இவர் சொல்கேட்டு பாட்டில் மணி போல் வந்து ஐயர் வீட்டிலிருப்பவர்களைப் பயமுறுத்துகின்றார். இதற்கிடையில் ஐயரின் மகளான காயத்ரி மீது காதல் நெருங்கிப் பழகுகின்றார். இவற்றைப்பார்த்து மனம் நொந்துகொள்ளும் அவர் பாட்டில் மணியை வெளியில் அனுப்புவதற்காகப் பலமுறை முயல்கின்றார். அச்சமயம் நண்பனின் காதலியென நினைத்து பிரியாவைக் (சதாவை) கடத்திச் செல்லும் சுப்பிரமணி பின்னர் பிரியா மீது காதல் கொள்கின்றார் எவ்வாறு பிரியாவை ரௌடியான அவள் தந்தையிடமிருந்து காப்பாற்றி ஒன்று சேருகின்றார் சுப்பிரமணி என்பதே திரைக்கதை.