அக்னி vs தேவி இயக்குனர் ஜெ.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து (ஐ.பி.சி) - இந்தியன் பேனல் கோட் சட்டத்தின் கீழ், ராஜேஷ் குமார் நாவல்-ஐ தழுவி இயக்கும் அதிரடி த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தில் பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன் மற்றும் சதிஷ் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஸ்டாலின் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
கதை
ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரிக்கும், அதிகாரம் பலம் படைத்த அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் சண்டைதான் இந்த அக்னி தேவி திரைப்படம்.
அக்னி தேவ் (பாபி சிம்ஹா) ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் தீபா (ரம்யா நம்பீசன்) பாபியின் காதலி. ஒரு நாள் பாபியை பேட்டி எடுக்க வருவதாக இருந்த பெண் நிருபர், பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்படுகிறார். அவரது அண்ணன் சஞ்சய்யும் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடக்கிறார். கொலையாளிகளை தேடுகிறார் பாபி சிம்ஹா.
ஆனால் மேலிடத்து அழுத்தம் காரணமாக பெண் நிருபரின் கொலை வழக்கில், அப்பாவி இளைஞன் ஒருவன் சிக்க வைக்கப்படுகிறான். இந்த சம்பவங்களுக்கு எல்லாம் பின்னால் இருப்பது, அமைச்சர் சகுந்தலா தேவி (மதுபாலா) என கண்டுபிடிக்கிறார் பாபி. சகுந்தலா தேவிக்கும், அக்னி தேவுக்கும் இடையே நேரடி சண்டை மூள்கிறது. அதில் யார் ஜெயிக்கிறார்கள், அந்த அப்பாவி இளைஞன் என்ன ஆகிறான் என்பது தான் படத்தின் கதை.