X
தமிழ் » திரைப்படங்கள் » அக்னி தேவி
அக்னி தேவி

அக்னி தேவி

Action | 22 Mar 2019 |
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

அக்னி தேவி கதை

அக்னி vs தேவி இயக்குனர் ஜெ.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து (ஐ.பி.சி) - இந்தியன் பேனல் கோட்  சட்டத்தின் கீழ், ராஜேஷ் குமார் நாவல்-ஐ தழுவி இயக்கும் அதிரடி த்ரில்லர் திரைப்படம்.  இத்திரைப்படத்தில் பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன் மற்றும் சதிஷ் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஸ்டாலின் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். கதை ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரிக்கும், அதிகாரம் பலம் படைத்த அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் சண்டைதான் இந்த அக்னி தேவி திரைப்படம்.     அக்னி தேவ் (பாபி சிம்ஹா) ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் தீபா (ரம்யா நம்பீசன்) பாபியின் காதலி. ஒரு நாள் பாபியை பேட்டி எடுக்க வருவதாக இருந்த பெண் நிருபர், பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்படுகிறார். அவரது அண்ணன் சஞ்சய்யும் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடக்கிறார். கொலையாளிகளை தேடுகிறார் பாபி சிம்ஹா.   ஆனால் மேலிடத்து அழுத்தம் காரணமாக பெண் நிருபரின் கொலை வழக்கில், அப்பாவி இளைஞன் ஒருவன் சிக்க வைக்கப்படுகிறான். இந்த சம்பவங்களுக்கு எல்லாம் பின்னால் இருப்பது, அமைச்சர் சகுந்தலா தேவி (மதுபாலா) என கண்டுபிடிக்கிறார் பாபி. சகுந்தலா தேவிக்கும், அக்னி தேவுக்கும் இடையே நேரடி சண்டை மூள்கிறது. அதில் யார் ஜெயிக்கிறார்கள், அந்த அப்பாவி இளைஞன் என்ன ஆகிறான் என்பது தான் படத்தின் கதை.
Read More

அக்னி தேவி நடிகர்கள் & படக்குழுவினர்

அக்னி தேவி அணியின் தகவல்

இயக்குனர் ஷாம் சூர்யா, ஜெபிஆர்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஜேக்ஸ் பிஜாய்
தயாரிப்பாளர் ஸ்டாலின், ஜெபிஆர்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

அக்னி தேவி விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
ஜானாவின் ஒளிப்பதிவில், இரண்டு கண்டெய்னர் லாரிகள் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் 'ஹெலிகேம் டாப் வியூ' காட்சி மிரட்டலாக இருக்கிறது. அதேபோல், சண்டை காட்சிகளையும் அருமையாக படம்பிடித்திருக்கிறார். முதல் பாதியை சுவாரஸ்யமாக எடிட் செய்த தீபக், இரண்டாம் பாதியையும் அதேபோல் கட் செய்திருக்கலாம். படத்தின் முக்கியமான இரண்டு கதாபாத்திரங்களுமே தங்கள் பணியை முழுமையாகவும், சரியாகவும் செய்யவில்லை. இதனால் டிரெய்லரில் இருந்த சுவாரஸ்யம் படத்தில் மிஸ்ஸிங். அக்னிக்கும் தேவிக்கும் இடையே நடக்கும் சண்டையை இன்னும் கொஞ்சம், அழுத்தமாக காட்டியிருந்தால், இரண்டாம் பாதி படமும் நன்றாக இருந்திருக்கும். எம்.எஸ்.பாஸ்கர் போன்ற நல்ல நடிகர்களை, இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். அதேபோல், இத்தனைக்கும் காரணம் கலவரங்கள் தான் பழிபோடுவதும் டூமச் பாஸ். ராஜேஷ் குமாரின் நாவலை படிக்கும் போது ஏற்படும் சுவாரஸ்யத்தை, படம் பார்க்கும் போதும் ஏற்படுத்தியிருந்தால், இந்த அக்னி தேவி, தீப்பிழம்பாய் தகித்திருக்கும்.

அக்னி தேவி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

அக்னி தேவி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+