அம்பிகாபதி என்கிற ராஞ்சனா என்பது 2013 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் வெளிவந்த இந்தி திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் அம்பிகாபதி என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது.
இத்திரைப்படத்தை ஆனந்த் ராய் இயக்கினார். இதில் தனுஷ், சோனம் கபூர், அபேய் தியோல் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்தனர். பாடல்களுக்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்தார். தமிழில் வைரமுத்து பாடல் வரிகளையும் ஜான் மகேந்திரன் வசனமும் எழுதியிருந்தனர். இந்தியில் வெளிவந்து ஒரு வாரம் கழித்து 28 ஜுன் 2013 தமிழில் வெளியிடப்பட்டது.