அமிகோ காராஜ் - இயக்குனர் பிரஷாந்த் நாகராஜன் இயக்கத்தில் மஹேந்திரன் (மாஸ்டர்), ஜி எம் சுந்தர், தீபா பாலு, சக்தி கோபால் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ராமசந்திரன் பெருமாள் 'பீப்பில் புரொடக்சன் ஹவுஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார்.
அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விஜயகுமார் சோலைமுத்து ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ரூபன் மற்றும் CS பிரேம் குமார் இணைந்து எடிட்டிங் செய்துள்ளனர்.
அமிகோ காராஜ் திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யூ/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் 2024 மார்ச் 15 உலகமெங்கும் வெளியாகியுள்ளது.