திரைப்படங்கள் பல வகைகள் மற்றும் பல கோணங்களை கொண்டுள்ளது. அந்த வகையில் நம் தமிழ் திரைப்படங்களில் சில பேய் படங்கள் குழந்தைகளையும் கவரும் வகையில் நகைச்சுவை படங்களாகவும் வெளிவந்துள்ளது. இத்திரைப்படங்களில் 2007-ம் ஆண்டு ராகவ லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த முனி திரைப்படமானது நகைச்சுவை கலந்த திகில் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் திரையுலகில் நகைச்சுவை பேய் படங்களுக்கு வரவேற்புகள் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இங்கு தமிழில் வெளிவந்த சில நகைச்சுவை பேய் படங்கள் இங்கு இந்த தளத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.