X
தேவி

தேவி

Romance | Thriller | 07 Oct 2016 | U |
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

தேவி கதை

தேவி (Devil ) இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில், பிரபு தேவ, தமன்னா, சோனு சூட் மற்றும் பலர் நடித்துள்ள த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தின் இணை வசன எழுத்தாளர் ஹோலிவுட்டின் பால் ஆரோன் ஆவார்.  ஹிந்தி திரைப்பட நடன இயக்குனர் பாரா கான் இத்திரைப்படத்தில் விருந்தினர் ரோலில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தினை நடிகர், இயக்குனர் பிரபு தேவா தயாரிக்கிறார். கதை :  கிருஷ்ணபிரபு (பிரபு தேவா) மும்பையில் வேலை செய்கிறார். அவர் தான் ஒரு சிறந்த மாடல் அழகியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் கிராமத்து பெண்ணான தமன்னாவை சூழ்நிலையின் காரணமாக விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொள்கிறார்.  தனக்கு திருமணம் ஆனதையும், தன் மனைவியையும் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்கிறார். சிறிது நாட்கள் கழித்து கிருஷ்ணா தன் மனைவியின் நடவடிக்கை மாறுவதை கவனிக்கிறார். அதனை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, தன் மனைவியின் உடலில் ஒரு ஆவி இருப்பதை கண்டறிகிறார். அந்த ஆவி தான் ஒரு சினிமா நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டு, அவ்வாசை நிறைவேறாமல் இறந்து போன ஒரு பெண்ணின் ஆவி. அந்த ஆவியின் பிடியிலிருந்து கிருஷ்ண பிரபு தன் மனைவியை எவ்வாறு மீட்டார் என்பதே படத்தின் மீதிக்கதை.
Read More

தேவி நடிகர்கள் & படக்குழுவினர்

தேவி அணியின் தகவல்

இயக்குனர் ஏ எல் விஜய்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் பிரபு தேவா
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

தேவி விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
முதல் முறையா ஒரு பேய்ப் படம்... பெரிய கிராபிக்ஸ் காட்சிகள், காதுகளைக் கிழிக்கும் எக்ஸ்ட்ரா டெஸிபல் சத்தங்கள் இல்லாமல் வந்திருக்கிறது. உண்மையிலேயே பிரபு தேவா கலக்கிவிட்டார், அந்த சால்மார் டான்சில். என்ன ஒரு எனர்ஜி... துள்ளல். நடிப்பிலும் குறை வைக்கவில்லை. பேயோடு அக்ரிமெண்ட் போடும் காட்சி, அதே பேயிடம் பின்னர் ப்ரெண்டாக முயற்சிப்பதும், உதவி கேட்பதும்.. நைஸ். வெல்கம் பேக் 'மைக்கேல் ஜாக்சன் ஆப் இந்தியா'! தமன்னாவுக்கு இதில் பஞ்ச் வசனம் கூட உண்டு. சாம்பிள்... 'ஒரு பொண்ணு அழகா இருந்தா ஆணை ஆளலாம். அறிவா இருந்தா நாட்டை ஆளலாம். அழகும், அறிவும் இருந்தா இந்த உலகையே ஆளலாம்!' சோனு சூட் ஒரு ஜென்டில்மேன் நடிகராக வந்து மனதைத் தொடுகிறார். ஆர்ஜே பாலாஜியின் ப்ளஸ் அவரது வேகமான உச்சரிப்புதான் என்றாலும், கிட்டத்தட்ட மோனோ ஆக்டிங் மாதிரி இருக்கிறது. கொஞ்சம் நடிங்க பாஸ்! ஒளிப்பதிவு ஓகே. இசைதான் மூன்று மொழிகளுக்கும் சேர்த்து மையமாகப் போட்ட மாதிரி ஒட்டாமல் நிற்கிறது. பிரபு தேவா நடனம்தான் அந்த இரு பாடல்களையும் பார்க்க வைக்கிறது. சுவாரஸ்யமான கதைதான். ஆனால் நீளமாக இழுத்துக் கொண்டே போகும் காட்சிகளை தயவு தாட்சண்யமின்றி இயக்குநர் வெட்டித் தள்ளியிருக்கலாம். ஆனாலும் ஒரு டீசன்டான பேய்ப்படம் பார்க்க தேவி போகலாம் என்று சொல்ல வைத்திருக்கிறார்கள் இயக்குநர் விஜய்யும் பிரபு தேவாவும்!

தேவி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

தேவி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+