தேவி கதை

  தேவி (Devil ) இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில், பிரபு தேவ, தமன்னா, சோனு சூட் மற்றும் பலர் நடித்துள்ள த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தின் இணை வசன எழுத்தாளர் ஹோலிவுட்டின் பால் ஆரோன் ஆவார். 

  ஹிந்தி திரைப்பட நடன இயக்குனர் பாரா கான் இத்திரைப்படத்தில் விருந்தினர் ரோலில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தினை நடிகர், இயக்குனர் பிரபு தேவா தயாரிக்கிறார்.

  கதை : 

  கிருஷ்ணபிரபு (பிரபு தேவா) மும்பையில் வேலை செய்கிறார். அவர் தான் ஒரு சிறந்த மாடல் அழகியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் கிராமத்து பெண்ணான தமன்னாவை சூழ்நிலையின் காரணமாக விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொள்கிறார். 

  தனக்கு திருமணம் ஆனதையும், தன் மனைவியையும் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்கிறார். சிறிது நாட்கள் கழித்து கிருஷ்ணா தன் மனைவியின் நடவடிக்கை மாறுவதை கவனிக்கிறார். அதனை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, தன் மனைவியின் உடலில் ஒரு ஆவி இருப்பதை கண்டறிகிறார்.

  அந்த ஆவி தான் ஒரு சினிமா நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டு, அவ்வாசை நிறைவேறாமல் இறந்து போன ஒரு பெண்ணின் ஆவி. அந்த ஆவியின் பிடியிலிருந்து கிருஷ்ண பிரபு தன் மனைவியை எவ்வாறு மீட்டார் என்பதே படத்தின் மீதிக்கதை.
  **Note:Hey! Would you like to share the story of the movie தேவி with us? Please send it to us (popcorn@oneindia.co.in).