அநீதி இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், தூஸ்ரா விஜயன், பரணி, வனிதா விஜயகுமார் என பல தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிரைம் & திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் முருகன் ஞானவேல் தனது அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
கிரைம் மற்றும் திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ரவிக்குமார் எம் எடிட்டிங் செய்துள்ளார்.
அநீதி திரைப்படம் 2023, ஜூன் 21ல் உலகமெங்கும் நேரடியாக திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.
அநீதி திரைப்படத்தின் கதை
அப்பாவை இழந்து ஒரு எளிய வாழ்க்கையை வாழும் அர்ஜுன் தாஸ், டெலிவரி பாய் வேலை செய்து வருகிறார். ஒரு பணக்கார இல்லத்தில் வயதான பாட்டியை விட்டு வெளிநாட்டில் வாழும் வாரிசுகள் தனது அம்மாவை பார்த்துக்கொள்ள துஷாரா விஜயனை வேலைக்கு வைக்கின்றனர். ஒரு கட்டத்தில் அர்ஜுன் தாஸ் - துஷாரா விஜயன் இருவருக்கும் அறிமுகம் கிடைத்து காதல் மலர்கிறது.
துஷாரா விஜயன் வேலை பார்க்கும் பணக்கார வீட்டில் இருக்கும் பாட்டி தீடிரென இறக்கிறார். அதே சமயத்தில் வெளிநாட்டில் வாழும் பணக்கார வாரிசுகள் வருகின்றனர். அவர்கள் துஷாரா விஜயன் மீது பழி சுமத்துகின்றனர். பின் என்ன ஆனது என்பது தான் அநீதி திரைப்படத்தின் கதை.