twitter

    ஆன்டி இண்டியன் கதை

    ஆன்டி இண்டியன் - தமிழ் சினிமா திரைப்படங்களை ஆன்லைன் யூ டியுப் வீடியோ மூலம் விமர்சனம் செய்து வந்துள்ள ப்ளூ சட்டை இளமாறன் தானே திரைக்கதை வடிவமைத்து, இயக்கி, இசையமைத்து, முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம்.

    ஆன்டி இண்டியன் திரைப்படத்தின் கதை

    அரசியல் கட்சிகளுக்கு சுவர் விளம்பரங்கள் மற்றும் ஓவியங்கள் வரைபவரான பாட்ஷா (ப்ளூ சட்டை மாறன்), சில மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகிறார். அவரது தாய் ஒரு இந்து, அவரது தந்தை ஒரு முஸ்லீம். அவரின் உடலை நல்லடக்கம் செய்வதில் பிரச்சனைகள் கிளம்புகிறது.

    தந்தை முஸ்லிம் என்பதால் பாட்ஷாவின் உடலைப் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்ய அவரது உறவினர்கள் எடுத்துச் செல்கின்றனர். ஆனால், பாட்ஷா உண்மையான முஸ்லிமாக வாழவில்லை என்றும், இதனால் பள்ளிவாசலில் அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்றும் அங்கிருக்கும் முஸ்லிம்களில் சிலர் உடலைத் திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

    பின் தாய் இந்து என்பதால் இந்து மக்களின் உடல்களை அடக்கம் செய்யும் மயான பூமிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இறந்தவரின் பெயர் பாட்ஷா என்றிருப்பதால் அங்கும் அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. பின் என்னஆனது என்பதே படத்தின் கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie ஆன்டி இண்டியன் with us? Please send it to us ([email protected]).