அப்பத்தா - இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ஊர்வசி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படம் ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்தில் 2023, ஜூலை 29ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
அப்பத்தா திரைப்படத்தின் கதை
ஜியோ சினிமாஸ் என்ற புதிய ஆன்லைன் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள படம் தான், அப்பத்தா. ஊர்வசி கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். அவரின் மகன் சென்னை அழைத்ததாக சொல்லி, சென்னைக்கு வரும் ஊர்வசி, தனது மகன் அம்மா பாசத்தில் அழைக்க வில்லை, அவர் வீட்டு நாயை பார்த்துக்கொள்ள அழைத்துள்ளார் என்பதை பற்றி அறிகிறார். பின் என்ன நடந்தது என்பது தான் படத்தின் கதை.