ஒரு திரைப்படமானது இயக்குனர்களின் கற்பனை பின்பங்களை பொறுத்து வேறுபடும், திரையுலகில் ஒரு திரைப்படத்தின் வெற்றி, தோல்வி மற்றும் வசூல் அடிப்படை கொண்டே அப்படத்தில் பணியாற்றியுள்ள பிரபலங்களின் திரை வாய்ப்பு மற்றும் திறமைகள் அங்கீகரிக்கப்படும். தோல்வியை சந்தித்த படங்களின் மூலம் அறிமுகமாகும் இயக்குனர்களின் திரைக்கனவுகள் கேள்விக்குரியது என்பது அனைவரும் அறிந்ததே. தனது முதல் திரைப்படத்திலையே மாறுபட்ட திரைக்கதை மூலம் வெற்றியை படைத்து பிரபலமான இயக்குனர்களின் அடுத்தடுத்து திரைப்படங்களில் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்தே செல்லும். இந்த சாதன பதிவில் தமிழ் திரையுலகில் பணியாற்றிவரும் இயக்குனர்களில், தனது முதல் திரைப்படத்திலையே யாரும் எதிர்பாராத வித்யாசமான கோணத்தில் படத்தினை இயக்கி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ள தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சிலர் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளனர்.