X
தமிழ் » திரைப்படங்கள் » காதலும் கடந்து போகும்
காதலும் கடந்து போகும்

காதலும் கடந்து போகும்

Drama | 11 Mar 2016 | U |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

காதலும் கடந்து போகும் கதை

காதலும் கடந்து போகும் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, மடோனா மற்றும் சமுத்திரக்கனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் காதல், நகைச்சுவை மற்றும் அதிரடித் திரைப்படம். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கதை :   இத்திரைப்படம் 2010-ம் ஆண்டு வெளியான மை டியர் டெச்ப்ரேடோ என்ற கொரியன் திரைப்படத்தின் மீளுருவாக்கம் ஆகும். கதையின் நாயகி மடனோ பட்டபடிப்பை முடித்து விட்டு, தன் சொந்த ஊரினை விட்டு வெளியேறி, சென்னைக்கு வருகிறார். சென்னையில், ஒரு ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை கிடைக்கிறது. அந்த நிறுவனம் சில நாட்களில் திவாலாக மூடப்படுகின்றது. இதனால், மற்றொரு வேலை கிடைக்கும் வரை விலை குறைவான வீட்டில் குடியேறுகிறார்.  மடோனா தங்கும் வீட்டின் பக்கத்துக்கு வீட்டில், ஒரு சிறிய ரவுடி கும்பலில் இருக்கும் விஜய் சேதுபதி வசிக்கின்றார். ஆரம்பத்தில் தன் வீட்டின் அருகே ஒரு ரவுடி கும்பலை சேர்ந்தவன் இருப்பதை வெறுத்த மடோனா, பின்னர் இருவரும் நண்பர்களாக பலகை ஆரம்பித்தனர்.  இருவரும் நட்பாக பழகும் நேரத்தில், விஜய் சேதுபதியின் குடியை நிறுத்துகிறார் மடோனா. விஜய் சேதுபதி, மடோனா தன்னை காதலிக்கின்றார் என நினைத்து, தன் காதலை சொல்ல, மடோனா மறுக்கிறார். அதேநேரத்தில், விஜய் சேதுபதியின், ரவுடி கும்பல் தலைவரால் இவருக்கு நெருக்கடியும், ஆபத்தும் வர, அதனை எப்படி சமாளிக்கின்றார், தனது காதலில் வெற்றி பெற்றாரா? என்பதே மீதிக்கதை.. 
Read More

காதலும் கடந்து போகும் நடிகர்கள் & படக்குழுவினர்

காதலும் கடந்து போகும் அணியின் தகவல்

இயக்குனர் நலன் குமாரசாமி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

காதலும் கடந்து போகும் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
கொரியப் படமான Nae Kkangpae Kateun Aein-வின் உரிமையை ரூ 40 லட்சத்துக்கு வாங்கி காதலும் கடந்து போகும் படத்தை எடுத்திருக்கிறார். கொஞ்சம் யோசித்திருந்தால் இதை விட பிரமாதமான கதை வட சென்னையிலோ, ஓஎம்ஆர் ஐடி காரிடாரிலோ கிடைத்திருக்கும்! எதார்த்தமான கதை. சினிமாத்தனம் இல்லாத கதை மனிதர்கள். இடைவேளைக்குப் பிறகு இலக்கில்லாமல் பயணிப்பது போன்ற உணர்வைத் தந்தாலும், கடந்து போகிற மேகங்கள் மாதிரிதான் காதலும் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார் நலன் குமாரசாமி. படத்தின் இன்னொரு ப்ளஸ்... வலிந்து திணிக்கப்படாத நகைச்சுவை. நாயகி மடோனாதான் படத்தின் பலம் (ப்ரேமம் புகழ்). அழகு, நடிப்பு இரண்டிலுமே டிஸ்டிங்ஷன். தமிழ் சினிமா அத்தனை சீக்கிரம் இவரை கேரளாவுக்கு அனுப்பாது என நம்பலாம். தூங்கு மூஞ்சி, சோம்பேறி, நல்ல மனசு கொண்ட அரைகுறை ரவுடி... இதுதான் படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர். அச்சு அசலாகப் பிரதிபலிக்கிறார். எஸ்கிமோ நாய் என்ற வார்த்தையால் பட்ட வலியை அவர் சொல்லிக் காட்டும் விதம் க்ளாஸ். நடிப்பிலும், காட்சிப்படுத்துதலிலும் இருந்த தேர்ச்சியும் ஒழுங்கும் திரைக்கதையிலும் இருந்திருக்கலாம். ஆனால் முழுமைத்துவம் என்பது மனிதனுக்கே இல்லை.. அந்த மனிதனின் படைப்பில் சின்னச் சின்ன குறைகள் இருக்கத்தானே செய்யும். அப்படி எடுத்துக் கொண்டால் இந்தப் படத்தை நீங்கள் லயித்து ரசிக்க முடியும்!

காதலும் கடந்து போகும் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

காதலும் கடந்து போகும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+