»   »  தொடர்ந்து ரவுடி தானா? கொஞ்சம் மாத்தி நடிங்க விஜய் சேதுபதி

தொடர்ந்து ரவுடி தானா? கொஞ்சம் மாத்தி நடிங்க விஜய் சேதுபதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நானும் ரவுடிதான், சேதுபதி, காதலும் கடந்து போகும் என ஹாட்ரிக் ஹிட்களை கொடுத்து மீண்டும் பார்முக்கு திரும்பியிருக்கிறார் விஜய் சேதுபதி.

இது விஜய் சேதுபதிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், மற்றொருபுறம் தொடர்ந்து விஜய் சேதுபதி ரவுடியாக நடித்து வருகிறார் என விமர்சனங்களும் எழத் தொடங்கியிருக்கின்றன.


நானும் ரவுடிதான், காதலும் கடந்து போகும் என விஜய் சேதுபதி ரவுடியாக நடித்த 2 படங்களும் ஹிட்டடித்திருக்கின்றன.


விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

சின்னச்சின்ன வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதியை, சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று முழு நடிகனாக அடையாளம் காட்டியது.


பீட்சா

பீட்சா

தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சுந்தரபாண்டியன், சூது கவ்வும் என்று வெரைட்டி காட்டிய விஜய் சேதுபதியை தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப் போனது. இதனால் முன்னணி நடிகர்களுக்கு இணையாக இவரின் மார்க்கெட் மதிப்பும் உயரத் தொடங்கியது.


சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி

சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி

எம்ஜிஆர்-சிவாஜி, கமல்-ரஜினி, அஜீத்- விஜய், சிம்பு-தனுஷ் போல சிவகார்த்திகேயன்- விஜய் சேதுபதி என்ற சொல்லும் அளவிற்கு விஜய் சேதுபதியின் வளர்ச்சி ஜெட் வேகத்தில் இருந்தது.


பண்ணையாரும் பத்மினியும்

பண்ணையாரும் பத்மினியும்

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்குப் பின் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படங்கள் வரிசையாக தோல்வியைத் தழுவின.ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை, ஆரஞ்சு மிட்டாய் மற்றும் வன்மம் போன்ற படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.
சிறப்புத் தோற்றம்

சிறப்புத் தோற்றம்

கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஜிகர்தண்டா மற்றும் திருடன் போலீஸ் என்று வரிசையாக சிறப்புத் தோற்றங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, தொடர் தோல்விகளால் அவ்வாறு நடிப்பதை குறைத்துக் கொண்டார்.


நானும் ரவுடிதான்

நானும் ரவுடிதான்

தோல்விகளால் தவித்த விஜய் சேதுபதியை விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடிதான் படம் மீட்டது. அடுத்து முதன்முறையாக இவர் போலீஸ் வேடத்தில் நடித்த சேதுபதி படமும் ஹிட்டானது.


ஹாட்ரிக் ஹிட்

ஹாட்ரிக் ஹிட்

கடந்த வாரம் வெளியான காதலும் கடந்து போகும் படத்தின் வெற்றியால், 2 வது முறையாக விஜய் சேதுபதி ஹாட்ரிக் ஹிட்களை சுவைத்திருக்கிறார். இதற்கு முன் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் என்று வரிசையாக 3 படங்களும் ஹிட் அடித்திருந்தது.


நானும் ரவுடி தான்

நானும் ரவுடி தான்

ஆனால் சமீப காலமாக விஜய் சேதுபதி ரவுடி வேடங்களில் அதிகம் நடிப்பதாக விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன. இதற்கு முன் சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் இடைவெளி விட்டு விஜய் சேதுபதி நடித்திருந்தார். ஆனால் நானும் ரவுடிதான், காதலும் கடந்து போகும் என்று குறுகிய காலத்தில் தற்போது 2 படங்களில் ரவுடியாக நடித்து விட்டார்.


விக்ரம்-வேதா

விக்ரம்-வேதா

விஜய் சேதுபதி கைவசம் தற்போது இடம் பொருள் ஏவல், தர்மதுரை, மெல்லிசை, இறைவி, ரெக்க, ஆண்டவன் கட்டளை மற்றும் விக்ரம்-வேதா என்று 7 படங்கள் உள்ளன. இதில் மாதவனுடன் இவர் இணைந்து நடிக்கும் விக்ரம்-வேதா படத்திலும் விஜய் சேதுபதி ரவுடியாகவே நடிக்கவுள்ளார்.
தொடர்ந்து ரவுடி

தொடர்ந்து ரவுடி

இதனால் ரவுடியாக நடிப்பதை குறைத்துக் கொண்டு முன்புபோல தரமான படங்களை விஜய் சேதுபதி தரவேண்டும், என்று அவரது ரசிகர்கள் கோரும் நிலை தற்போது உருவாகியிருக்கிறது.


ரவுடித்தனத்தை குறைத்துக் கொள்வாரா விஜய் சேதுபதி ? பார்க்கலாம்.English summary
Vijay Sethupathi Continued Rowdy Role in his Movies. Now Audience Expect Variety acting and Different Movies from Vijay Sethupathi.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil