»   »  'காதலும் கடந்து போகும்' தரமான பொழுதுபோக்கு... பாராட்டும் ரசிகர்கள்

'காதலும் கடந்து போகும்' தரமான பொழுதுபோக்கு... பாராட்டும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டின், சமுத்திரக்கனி நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் காதலும் கடந்து போகும்.

'சூது கவ்வும்' நலன் குமாரசாமி -விஜய் சேதுபதி ஹிட் கூட்டணி 2 வது முறையாக இப்படத்தின் மூலம் இணைந்திருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தை சி.வி.குமார் தயாரித்து இருக்கிறார்.


'மை டியர் டெஸ்பரடோ' என்னும் கொரியன் படத்தை 40 லட்சம் கொடுத்து தமிழில் ரீமேக் செய்திருக்கின்றனர். 40 லட்சம் கொடுக்கும் அளவுக்கு நலன் குமாரசாமியை கவர்ந்த இப்படம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்ததா? பார்க்கலாம்.


சரக்கு சீன்

அந்த வாழைப்பழம் + சரக்கு சீன் செம என்று காதலும் கடந்து போகும் படத்தின் காட்சியை பாராட்டி இருக்கிறார் சினி டிப்பர்.


டைம்பாஸ்

நலன் குமாரசாமியை நகைச்சுவை கதைகளின் மாஸ்டர் என்று மனந்திறந்து பாராட்டியிருக்கிறார் சினிமாக்காரன்.


வசனங்கள்

படத்தின் வசனங்கள், இசை, நடிப்பு எல்லாமே நன்றாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார் வெங்கட்.
கவிதை

காதலும் கடந்து போகும் கவிதை நடையில் அழகாக இருப்பதாக ஜாக்கி பாராட்டியிருக்கிறார்.


மொத்தத்தில் விஜய் சேதுபதியின் காதலும் கடந்து போகும் நன்றாக இருப்பதாக, ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


இதைப் போல மேலும் பல ரசிகர்களும் இப்படத்தைப் பாராட்டி வருவதால் தற்போது #vijaysethupathi என்னும் ஹெஷ்டேக், ட்விட்டரில் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது.
English summary
Vijay Sethupathi,Madonna Sebastian Starring Kadhalum Kadanthu Pogum Today released Worldwide, Written& Directed by Nalan Kumarasamy- Live Audience Response.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil