»   »  வசூலில்.. ஜெய்யின் 'புகழை' சாய்த்த விஜய் சேதுபதி

வசூலில்.. ஜெய்யின் 'புகழை' சாய்த்த விஜய் சேதுபதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த வாரம் வெளியான 5 படங்களில், ஜெய்யின் புகழ் மட்டுமே திரையரங்குகளில் ஓரளவு வசூல் ஈட்டியிருக்கிறது.

புகழ், விடாயுதம், என்று தணியும், சவாரி மற்றும் ஆகம் என்று 5 படங்கள் கடந்த வாரம் வெளியாகின.இதில் புகழ் தவிர்த்து வெளியான மற்ற படங்கள் எண்ணிக்கையை மட்டுமே உயர்த்தியுள்ளன.


Pughal vs Kadhalum Kadanthu Pogum Box Office Report

ஜெய், சுரபி நடிப்பில் வெளியான புகழ் முதல் வாரத்தில் 39 லட்சங்களை சென்னையில் வசூல் செய்திருக்கிறது.கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் பெரிதாக எதிர்மறை விமர்சனங்கள் இல்லை என்பது புகழுக்கு பலம் சேர்த்துள்ளது.


அதே நேரம் விஜய் சேதுபதி-மடோனா நடிப்பில் வெளியான காதலும் கடந்து போகும் 1.36 கோடிகளை வசூல் செய்திருக்கிறது.மார்ச் 11 ம் தேதி வெளியான இப்படம் இதுவரை 2.53 கோடிகளை சென்னையில் மட்டும் வசூல் செய்திருக்கிறது.


வேறு பெரிய படங்கள் எதுவும் இல்லாதது, விஜய் சேதுபதி, மடோனாவின் நடிப்பு ஆகியவை படத்திற்கு பெரும்பலம் சேர்த்திருக்கின்றன.


Pughal vs Kadhalum Kadanthu Pogum Box Office Report

விஜய் சேதுபதி படங்களில் மிகப்பெரிய ஓபனிங் மற்றும் வசூல் இரண்டையும் ஒருசேரப் பெற்றிருக்கிறது காதலும் கடந்து போகும்.


அடுத்த வாரம் வெளியாகும் படங்கள் புகழ், காதலும் கடந்து போகும் படங்களின் வசூலில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும்.

English summary
Jai's Pughal and Vijay Sethupathi's Kadhalum Kadanthu Pogum Chennai Box Office Report.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil