»   »  இன்று காதலும் கடந்து போகும் உள்பட 6 புதுப் படங்கள் ரிலீஸ்!

இன்று காதலும் கடந்து போகும் உள்பட 6 புதுப் படங்கள் ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்று காதலும் கடந்து போகும் உள்பட 6 புதிய படங்கள் வெளியாகின்றன. தேர்தல் நேரம் என்பதால் ரிலீசுக்குத் தயாராக உள்ள அத்தனைப் படங்களையுமே ஏப்ரல் இறுதிக்குள் வெளியிட்டுவிடும் மும்முரத்தில் உள்ளனர் தயாரிப்பாளர்கள்.

அந்த வகையில் இன்று வெளியாகவிருக்கும் புதிய படங்கள்...


மாப்ள சிங்கம்

மாப்ள சிங்கம்

விமல் - அஞ்சலி நடித்துள்ள மாப்ள சிங்கம் படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்துள்ளார். புதுமுகங்கள் டான் அசோக் கதை வசனம் எழுத, ராஜசேகர் இயக்கியுள்ளார்.
காதலும் கடந்து போகும்

காதலும் கடந்து போகும்

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா, சமுத்திரக்கனி நடித்துள்ள படம் இது. அடுத்தடுத்து இரு வெற்றிகளை ருசித்த விஜய் சேதுபதிக்கு இந்த காதல் படம் என்ன ரிசல்டைத் தரப்போகிறது என்பதைக் காண கோடம்பாக்கம் காத்திருக்கிறது.
அவியல்

அவியல்

கார்த்திக் சுப்பராஜின் அடுத்த குறும்பட முயற்சி அவியல். இதில் பிரபல இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் உள்ளிட்ட 5 பேர் இயக்கிய குறும்படங்கள் இடம்பெற்றுள்ளன.


கோடை மழை

கோடை மழை

கண்ணன் - ஸ்ரீப்ரியங்கா நடித்துள்ள கோடை மழை படத்தை பிரபு தேவாவின் உதவியாளர் கதிரவன் இயக்கியுள்ளார். யாழ் தமிழ் திரை தயாரித்துள்ளது.


என்ன பிடிச்சிருக்கா

என்ன பிடிச்சிருக்கா

சுப்புராஜ் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தௌ ப்ரைட் ப்யூச்சர் மூவீஸ் தயாரித்துள்ளது. இதில் நாயகனாக கெவின் அறிமுகமாகிறார். இவர் பிரபல நடிகை அனுராதாவின் மகன். நாயகியாக பிரீத்தி விஜ் நடிக்கிறார்.


நட்பதிகாரம் 79

நட்பதிகாரம் 79

கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு, சந்தித்த வேளை ஆகிய படங்களை டைரக்டு செய்த ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம் நட்பதிகாரம் 79. கதாநாயகன்களாக 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் நடித்த ராஜ் பரத், 'வல்லினம்' படத்தில் நடித்த அம்ஜத்கான் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ரேஷ்மி, தேஜஸ்வி ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.


English summary
There are 6 new movies releasing this Friday in Tamil including Vijay Sethupathy's Kadhalum Kadanthu Pogum.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil