twitter
    X
    Home சினி தரவரிசை

    உடல் பருமன் காரணமாக ரசிகர்கள் கிண்டல் செய்த தமிழ் நடிகர்கள்

    Author Sakthi Harinath | Updated: Monday, March 20, 2023, 03:50 PM [IST]

    தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் பல நடிகர்கள் பல விமர்சனங்களை கடந்து பிரபலமாக உள்ளனர். இந்த பட்டியலில் உடல் பருமன் காரணமாக ரசிகர்கள் கிண்டல் செய்த தமிழ் நடிகர்கள் சிலர் இங்கு உள்ளனர். 'லிட்டில் சூப்பர் ஸ்டார்' சிலம்பரசன் உடல் எடை அதிகரித்து பலரால் விமர்சிக்கப்பட்டார். பின் தன் உடல் எடையை குறைத்து மாஸ் காட்டி வருகிறார். இவரை போன்று பல பல பிரபலங்கள் இந்த பட்டியலில் உள்ளனர்.

    cover image

    1

    'லிட்டில் சூப்பர் ஸ்டார்' சிலம்பரசன் என பலரால் கொண்டாடப்படும் இவர், உடல் எடை அதிகரித்து பலரால் விமர்சிக்கப்பட்டு திரையுலகில் தன் மார்க்கெட்டை இழந்தார். பின் ஆயுர்வேத சிகிச்சை மற்றும் பல உடல் பயிற்சி செய்து தன் உடை எடை குறைத்து, திரைப்படங்கள் மூலம் மாஸ் காட்டி வருகிறார்.

    2

    அஜித் குமார் - தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஆவார். இவரது படங்கள் 100 கோடிகளை கடந்து வசூல் செய்து வருகிறது. திரையுலகில் பல கோடி ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித் குமார், உடல் எடை காரணமாக பலரால் கிண்டல் செய்யப்பட்டு விமர்சிக்கப்பட்டுள்ளார். பல திரையுலக விமர்சகர்கள் இவரின் உடல் எடையை காரணம் காட்டி கிண்டல் செய்துள்ளனர். இருப்பினும் தமிழ் சினிமாவில் இவருக்கு ஆதரவை பல கோடி ரசிகர்கள் உள்ளனர்.

    3

    சூர்யா - நடிகர் சூர்யாவின் திரையுலக தொடக்க காலத்தில் இவர் பல அவமானங்களை கடந்து தற்போது முன்னணி நடிகராக ஜொலிக்கிறார். இவரின் உடல் தோற்றம் மற்றும் நடிப்பு என திரையுலகில் இவரது தொடக்க காலத்தில் பலர் இவரை அவமதித்துள்ளனர். ஆனால் இப்பொழுது சிக்ஸ் பேக் நடிகராக & நடிப்பு நாயகனாக புகழ் பெற்றுள்ளார், சூர்யா.

    4

    யோகி பாபு தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் ஆவார். இவரது நகைச்சுவை காட்சிகள் தமிழ் திரையுலக ரசிகர்களை மகிழ்வித்து கொண்டாடப்பட்டுள்ளது. இவரது உடல் தோற்றத்தை கண்டு பலர் இவரை விமர்சித்து அவமதித்துள்ளனர். இதனை பற்றி இவர் பல பேட்டிகளில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

    5

    பாய்ஸ் படத்தில் நடித்து தன் திரைப்பயணத்தை தொடங்கியவர், நடிகர் நகுல். பாய்ஸ் படத்திற்கு பின் இவருக்கு எந்த ஒரு படவாய்ப்பு இல்லை. உடல் பருமன் காரணமாக பலரால் விமர்சிக்கப்பட்டவர். இவர் தன் உடல் எடையை குறைத்து 'காதலில் விழுந்தேன்' படத்தின் மூலம் திரைப்பயணத்தை தொடங்கினார். தற்போது தமிழ் சினிமாவில் இவர் முக்கிய நடிகராக உள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X