X
ஜவான்

ஜவான்

Action | Drama | Family | 07 Sep 2023 | U/A | 169 Mins
Tamil

2.5 /5 Users

4 /5 Filmibeat

ஜவான் கதை

ஜவான் இயக்குனர் அட்லீ குமார் இயக்கத்தில் ஷாருக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி என பல முக்கிய பிரபலங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரில்லர் & அதிரடி திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கௌரி கான் 'ரெட் சில்லிஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். அதிரடி மற்றும் திரில்லர் திரைக்கதையில் இந்திய ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ரூபன் எடிட்டிங் செய்துள்ளார். ஜவான் படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு ' யு/ஏ ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படத்தினை ஷாருக் கான்-ன் ரெட் சில்லிஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ' ரெட் ஜெயண்ட் மூவிஸ் ' நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. ஜவான் திரைப்படத்தின் படக்குழு & திரைநட்சத்திர தகவல்கள் ஜவான் திரைப்படத்தின் டிரைலர், டீசர் & பாடல் வீடியோக்கள் ஜவான் திரைப்படத்தின் கதை கதைக்கரு - அரசாங்க அதிகாரிகளின் ஊழல் செயலில் பாதிக்கப்படும் அரசு ராணுவ வீரர்களுக்காக போராடும் நாயகன் (ஷாருக் கான்) மீது தவறான குற்றங்களை பதிவிட்டு அழிக்கின்றனர். இந்த குற்றங்களை எதிர்த்து பழிவாங்க அவரின் மகன் நாயகன் (ஷாருக் கான்) அரசு அதிகாரத்தை எதிர்த்து போராடுவதே இப்படத்தின் கதைக்கரு. கதை மும்பையில் ஒரு பெண் சிறைச்சாலையின் ஜெயிலராக பணியாற்றி வருகிறார், ஆசாத் ரத்தோர் (ஷாருக் கான்). இவரது குழுவில் கல்கி, ஈரம், லட்சுமி, இஷ்க்ரா, ஜான்வி மற்றும் ஹெலினா என பெண் கைதிகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இணைந்து குழுவாக மும்பையில் உள்ள மெட்ரோ ரயிலை கடத்தி, அங்குள்ள பயணிகளை பணயமாக வைத்து ஒரு உயிருக்கு ஈடாக ₹40,000 கோடியை அனுப்புமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கின்றனர். இதற்காக ஷாருக் NSG அதிகாரியான நர்மதா ராயுடன் (நயன்தாரா) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த மெட்ரோ ரயிலில் ஒரு பனைய கைதியாக இருக்கும் கலி கெய்க்வாட் (விஜய் சேதுபதி)யின் மகளுக்காக விஜய் சேதுபதி ஷாருக் கேட்கும் பணத்தை தருகிறார். அந்த பணத்தை ஏழை மக்களுக்கான திட்டத்திற்கு நன்கொடையாக வழங்க சொல்கிறது, ஷாருக் குழு. பின் அங்கிருந்து ஷாருக் தனது குழுவுடன் வெற்றிகரமாக தப்பிக்கிறார். ஆசாத் நர்மதாவை சந்தித்து காதல் ரொமான்ஸ் என வாழ்கிறார். இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.  மீண்டும் ஒரு முறை ஆசாத் தனது கூட்டாளிகளுடன் இணைந்து ஒரு அமைச்சரை கடத்தி ஒரு மருத்துவமனையை புதுப்பிக்கும் படி நிபந்தனை வைக்கின்றனர். அதில் வெற்றிகரமாக காவலர்களிடம் இருந்து தப்பித்து வில்லன்களிடம் மாட்டுகின்றனர். வில்லன் இவர்களை தாக்க, மற்றொரு ஷாருக் கான் திரைக்கதையில் களமிறங்குகிறார். அவர் ஆசாத்-யை காப்பாற்றி பாதுகாப்பாக மீட்டுகிறார். இதனை பற்றி அறியும் நயன்தாரா மற்றொரு ஷாருக் கான் பற்றிய உண்மையை கண்டறிகிறார். யார் அந்த இரண்டாம் ஷாருக் கான்? அவரின் பின் கதை என்ன? அவருக்கும் ஆசாத் (ஷாருக் கான்) இடையே என்ன இருக்கிறது என்பது தான் சமூக அக்கறைகள் நிறைந்த ஜவான் படத்தின் கதை. ரிசல்ட் - மொத்தத்தில் ஜவான் - பிளாக்பஸ்டர் ஜாக்பாட்!
Read More

ஜவான் நடிகர்கள் & படக்குழுவினர்

ஜவான் அணியின் தகவல்

இயக்குனர் அட்லி குமார்
கதை அட்லி குமார்
சங்கதி அட்லி குமார்
ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு
தொகுப்பாளர் அன்டனி ரூபன்
இசை அனிருத் ரவிச்சந்தர்
தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், ஷாருக் கான்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஜவான் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
அரசாங்க அதிகாரிகளின் ஊழல் செயலில் பாதிக்கப்படும் அரசு ராணுவ வீரர்களுக்காக போராடும் நாயகன் (ஷாருக் கான்) மீது தவறான குற்றங்களை பதிவிட்டு அழிக்கின்றனர். இந்த குற்றங்களை எதிர்த்து பழிவாங்க அவரின் மகன் நாயகன் (ஷாருக் கான்) அரசு அதிகாரத்தை எதிர்த்து போராடுவதே இப்படத்தின் கதைக்கரு. ரிசல்ட் - மொத்தத்தில் ஜவான் - பிளாக்பஸ்டர் ஜாக்பாட்!

ஜவான் ட்ரெய்லர்

Video Thumbnail

ஜவான் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஜவான்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+