அரிமா நம்பி 2014-ம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கிய இத்திரைப்படம் ஒரு ஆக்சன் திரைப்படமாகும். நடிகர் விக்ரம் பிரபு, நடிகை பிரியா ஆனந்த் ஆகியோர் இணைந்து நடித்த இத்திரைப்படத்தில் டிரம்ஸ் சிவமணி இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவில் புவன்ஸ்ரீநிவாசன் படத்தொகுப்பில் உருவான இத்திரைப்படம் சிறப்பான வசூலை ஈட்டி சிறந்த வெற்றிப்படமாக அமைந்தது.
அர்ஜுன் கிருஷ்ணா (விக்ரம் பிரபு) மற்றும் அனாமிகா ரகுநாத் (பிரியா ஆனந்த்) இருவரும் ஹோட்டலில் சந்திக்கின்றனர். அவர்களுடைய முதல் சந்திப்பில் இருவரும் காதல் வயப்படுகின்றனர். அர்ஜுன் அனமிகாவின் வீட்டிற்கு செல்லும் போது அநமிகாவை கடத்துகிறார்கள். அர்ஜுன் பல போராட்டத்திற்கு கடத்தியவர்களை கண்டறிந்து அநமிகாவை விடுவிக்கின்றார். பிறகு, அனமிக்காவை காப்பாற்றியதற்கு அர்ஜுனையும் கொல்லநினைக்கின்றனர். அவர்களிடமிருந்து அர்ஜுன் தப்பித்தாரா? அனாமிக்கவை கடத்தியதற்கான காரணத்தை கண்டறிந்தார? என்பு மீதி கதை.