twitter
    Tamil»Movies»aruvam»Story

    அருவம் கதை

    அருவம் இயக்குனர் சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த், கேதரின் தெரசா, சதீஷ் நடித்துள்ள திகில் திரைப்படம். இத்திரைப்படத்தை ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.சவுந்தர்யா மற்றும் தீபா ஐயர் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் எஸ். தமன் இசையமைத்துள்ளார்.

    திரில்லர் மற்றும் திகழ் படமாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் என் கே ஏகாம்பரம் மற்றும் படத்தொகுப்பாளர் பிரவீன் கே எல் இணைந்து பணியாற்றியுள்ளனர். 

    அருவம் திரைப்படத்தின் தகவல்கள்

    2017-ம் ஆண்டு சித்தார்த் நடிப்பில் திகில் படமாக பிரபலமான அவள் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சித்தார்த் நடிக்கும் திகில் திரைப்படம். இத்திரைப்படம் திகில் படமாக உருவாகியிருந்தாலும் சமுதாய கருத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளது.

    உணவின் முக்கியத்துவத்தையும் அதில் நடக்கும் கலப்படம் மற்றும் உணவின் சுகாதாரத்தை மையமாக கொண்டு திகில் மற்றும் திரில்லர் பாணியில் இத்திரைப்படத்தினை உருவாக்கியுள்ளனர் படக்குழுவினர்.

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2018 டிசம்பர் 31-ல் இணையதள பக்கங்களில் படக்குழுவினரால் வெளியானது.

    அருவம் திரைப்படத்தின் கதை

    இத்திரைப்படத்தின் தொடக்கத்திலையே இது திகில் ரீதியாக இருக்கக்கூடிய திரைப்படம் என்பதை இயக்குனர் கூறிவிடுகிறார். பேய் திரைப்படத்திற்கு தேவையான எந்த ஒரு சம்மந்தமும் இல்லாமல் நாயகன் நேர்மை, நாயகி குறை, காதல் என கதை நகர்கிறது.

    இப்படத்தின் நாயகன் சித்தார்த் தமிழ் நாடு உணவு பாதுகாப்பு துறையில் அசிஸ்டண்ட் கமிசனர் பதவியில் இருக்கும் ஒரு நேர்மையான அதிகாரி. இவர் சென்னையில் சாதாரண டீ கடை முதல் பெரிய உணவு உற்பத்தி தொழிற்சாலை வரை பல நிறுவனங்களை எதிர்த்து சீல் வைத்து வருகிறார். இதனால் இவருக்கு பல எதிரிகள் உருவாகின்றனர்.

    படத்தின் நாயகியான கேதரின் தெரசா பிறவியில் இருந்து நுகரும் திறனற்ற மாற்று திறனாளியாக வருகிறார். இவர் தனது குறையை பொருட்படுத்தாமல் சகஜமாக வாழ்ந்து வருகிறார். நாயகியின் குறையினை பொருட்படுத்தாமல் நாயகியை காதலிக்கும் நாயகன் சித்தார்த், ஒரு வழியாக கேதரின் தெரசா-வை திருமணத்திற்கு சமதிக்க வைக்கிறார்.

    சித்தார்த் திருமணம் நடக்கும் நேரத்தில் இவரை கொல்ல பல திட்டங்களை தீட்டுகிறார்கள் வில்லன்கள். தீடிரென நாயகியின் உடலில் ஒரு சில மாற்றங்கள் உருவாகின்றன, இவரின் உடலுக்குள் ஒரு ஆவி புகுந்து வில்லன்களை பழிவாகுகிறது. எதற்காக ஆவி பழிவாங்குகிறது என்னும் காரணத்தை சமூக கருத்துகளுடன் கூறியுள்ளார் இயக்குனர்.
    **Note:Hey! Would you like to share the story of the movie அருவம் with us? Please send it to us ([email protected]).