Tamil»Movies»Asuran»Story

  அசுரன் கதை

  அசுரன் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், மஞ்சு வாரியர் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

  அதிரடி படமாக உருவாகும் அசுரன் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான வேல்ராஜ் ஒளிப்பதிவில் படத்தொகுப்பாளர் ராமர் ஆர் பணியாற்றியுள்ளார்.


   
  தேசிய விருது 

  அசுரன் திரைப்படம் 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் நாள் தமிழ் திரையரங்குகளில் வெளியானது. மிகவும் அழுத்தமான சமூக கருத்துகளை அதிரடி திரைக்கதையில் உருவாக்கி இப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் புகழ் பெற்றுள்ளார்.

  இப்படம் 2019ஆம் ஆண்டிற்கான 67-வது தேசிய விருதினை அள்ளிச்சென்றுள்ளது. இப்படத்தின் நாயகன் தனுஷ் சிறந்த நடிகனாகவும், இப்படம் சிறந்த திரைப்படமாகவும் தேர்வாகி தேசிய விருதுகளை அள்ளி புகழ் பெற்றுள்ளது.

  அசுரன் திரைப்படத்தின் கதை

  சிவசாமி (தனுஷ்) ஒரு காட்டிற்குள் தலைமறைவாக தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இவர் காட்டில் பதுங்கி பதுங்கி தனது மகன் (கென் கருணாஸ்)-யுடன் செல்லும் காட்சியில் தொடங்குகிறது திரைப்படம். 

  படம் தொடங்கிய சில நிமிடங்களிலையே தனுஷின் கடந்த வாழ்க்கையினை பற்றி பிளாஷ்பேக் காட்சிகள் விரிகிறது. ஒரு கிராமத்தில் வடக்கூர், தெற்கூர் என ஜாதி வேற்றுமையில் இரண்டாக பிரிந்துள்ளனர் ஊர் மக்கள். தெற்கூரில் சிவசாமி (தனுஷ்) மற்றும் அவரது அழகான குடும்பத்துடன் வாழ்துவருகிறார். இவரின் மனைவி மஞ்சு வாரியர், இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் என மகிழ்ச்சியாய் வாழ்கிறார் தனுஷ்.

  ஜாதியால் ஒடுக்கப்பட்ட தெற்கூர் மக்களின் வாழ்வாதாரத்தை கண்டு வடக்கூர் மக்கள் பொறாமை கொள்கின்றனர். இதனால் தெற்கூர் மக்களை மிரட்டியும், தனது பணபலத்தால் முடக்கியும் அவர்களின் விவசாய நிலங்களை வாங்கி அங்கே ஒரு சிமெண்ட் உற்பத்தி சாலை அமைக்க திட்டமிடுகிறார், வடக்கூர் கிராமத்தின் உள்ள தலைவர் ஆடுகளம் நரேன்.

  அந்த நிலங்களில் தனுஷ்-ன் 3 ஏக்கர் நிலங்களும் வருகிறது. தனுஷ்-ன் நிலங்களை வாங்க பலர் பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இருப்பினும் தனுஷ் அவரின் 3 ஏக்கர் நிலங்களை தர மறுக்கிறார்.

  ஒரு நாள் மஞ்சு வாரியரை தவறுதலாக பேச தனுஷ்-ன் மூத்த மகன் முருகன் (டீஜே அருணாச்சலம்) அதை தைரியமாக கோபத்துடன் தட்டி கேட்கிறார். இதனால் அவரை போலீஸ் பிடித்துச்செல்லகிறது. அவருக்காக வடக்கூர் ஊரில் இருக்கும் அனைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு தனது மகனை ஜெயில்-லில் இருந்து அழைத்து வருகிறார், தனுஷ்.

  முருகன் வீட்டிற்கு திரும்பியதும், கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். 

  அதற்கு பழிதீர்க்க விருப்பமில்லாமல் மனதிற்குள்ளேயே புழுங்கிக்கொண்டிருக்கும்  தனுஷ்-யை கோழை என எண்ணி  இளைய மகன் சிதம்பரம் (கென் கருணாஸ்) கடும் கோபமாகிறார். இதனால் சிதம்பரம் அண்ணன்-யை கொலை செய்த நபரை கொலைசெய்கிறார்.

  இதனால் காட்டிற்குள் தலைமறைவாகிறார் தனுஷ் மற்றும் சிதம்பரம். பின்னர் என்ன ஆனது? என்பதே படத்தின் கதை.

  திரைப்படத்தை பற்றிய பிரத்தியேக தகவல்கள்

  வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை திரைப்படத்தினை தொடர்ந்து நான்காவது முறையாக அசுரன் திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இதை தவிர வெற்றிமாறன் இயக்கிய விசாரணை, காக்கா முட்டை திரைப்படத்தில் தயாரிப்பாளராக தனுஷ் பணியாற்றியுள்ளார்.

  இத்திரைப்படத்தில் தனுஷுடன் மஞ்சு வாரியர், யோகிபாபு, பாலாஜி சக்திவேல், சோமசுந்தரம் ஆகியோர் நடித்துள்ளனர். அசுரன் திரைப்படத்தில் ஒரு சிறப்பு கௌரவ தோற்றத்தில் விஜய் சேதுபதி தனுஷுடன் நடிக்கவுள்ளார். இவர்கள் கூட்டணியில் செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை திரைப்படத்தில் தனுஷுடன் விஜய் சேதுபதி நடித்து திரையுலகில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

  ஜி.வி.பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆடுகளம் திரைப்படத்தில் பிரபலமான "ஒத்தசொல்லல" பாடலை எழுதிய பாடலாசிரியர் ஏகாதசி இப்படத்திலும் ஒரு பாடலை எழுதியுள்ளார். எனவே அசுரன் திரைப்பட பாடல்களும் ஆடுகளும் திரைப்பட பாடல்கள் போலவே வெற்றிபெறும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் ஜி.வி.பிரகாஷ் குமார்.

  ரிலீஸ்

  இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் அசுரன் திரைப்படத்தின் ட்ரைலர் செப். 8ல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அசுரன் திரைப்படத்தின் ட்ரைலரில் இடம்பெற்றுள்ள அழுத்தமான வசனங்களால் இப்படத்தின் ட்ரைலர் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.
  **Note:Hey! Would you like to share the story of the movie அசுரன் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).