அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் கதை

  அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் ஹாலிவுட் இயக்குனர்களான ரஸோ சகோதரர்கள் இயக்கத்தில் மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், மார்வெல் சீரிஸ்ல் இடம்பெற்ற அனைத்து சூப்பர் ஹீரோக்களும் ஒன்றாக இணைந்து நடிக்கும் திரைப்படமாகும். மேலும் இப்படத்திற்கு தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா தமிழில் டப்பிங் செய்துள்ளனர், மற்றும் தமிழ் திரைப்பட இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.

  இத்திரைப்படத்தில் ஐயன் மேன், தோர், கேப்டன் அமெரிக்கா, ஹாக்காய், பிளாக் விடொவ் என்கிற ஐவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் தமிழில் விஜய் சேதுபதி ஐயன் மேன் கதாபாத்திரத்திற்கும், ஆண்ட்ரியா பிளாக் விடொவ் கதாபாத்திரத்திற்கும் டப்பிங் பேசியுள்ளனர்.

  தொடர்ச்சி
  இத்திரைப்படமானது மார்வெல் க்ரியேஷன்ஸ்-ல் உள்ள வெவ்வேறு சக்திகளை கொண்டு வெவ்வேறு கதாபாத்திரங்களில் உள்ள அணைத்து சூப்பர் ஹீரோக்களும் ஒன்றிணைந்து போராடும் திரைப்படமாகும்.

  கடந்த ஆண்டு 2018ல் அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் திரைப்படத்தில் பிர்ப்பஜத்தின் ஆறு மந்தர கற்களை கைப்பற்றிய இப்படத்தின் வில்லனான தானுஷ், மந்திர கற்களின் சக்தியை கொண்டு ஒரே சொடக்கில் பிர்ப்பஜத்தில்  வாழும் அணைத்து உயிரினங்களின் எண்ணிக்கையை பாதியாக அழித்துவிடுவார்.

  அத்திரைப்படத்தின் தொடர்ச்சியாக இத்திரைப்படத்தில் தானுஸை அழித்து மீண்டும் பிர்ப்பஜத்தில் தானுஷால் அழிந்துபோன உயிர்களை மீட்பதே இப்படத்தின் கதைக்கரு ஆகும்.

  கதை
  படத்தொடக்கத்தில் ஹக்கியாய் தனது குடுப்பதுடன் நேரம் செலவழித்து இருக்கும்போது திடிரென அவர் மனைவி மற்றும் குழந்தைகள் சாம்பலாக கரைகின்றனர். நிக் பியூரியின் அழைப்பையேற்று பூமிக்கு வரும் கேப்டன் மார்வெல் தானுஷை பற்றி அறிகிறார். பின்னர் விண்வெளியில் தத்தளித்து கொண்டிருக்கும் டோனி(அயன் மேன்) மற்றும் கமெரா என்பவரை கேப்டன் மார்வெல் விண்வெளிக்கு சென்று காப்பாற்றி பூமிக்கு அழைத்து வருகிறார். பூமியில் டோனியை உயிருடன் மிஞ்சி இருக்கும் அவெஞ்சர்ஸ் குழு வரவேற்கிறது.

  தானுஷின் வளர்ப்புமகளான கமெராவின் உதவிகொண்டு தானுஷின் கிரகமான டைடன்க்கு சென்று தானுஷ் எதிர்பாராத நேரத்தில் கண் இமைக்கும் நொடியில் தானுஷை தாக்கி அளிக்கின்றனர். பின்னர் மந்திரக்கர்களின் சக்தி மற்றும் அதனை தாங்கும் உரையானது பழுதடைந்து உள்ளதை கண்டு எதுவும் செய்யாமல் இயல்புவாழ்க்கைக்கு திரும்புகின்றனர் அவெஞ்சர்ஸ்.

  5 வருடப்பிகள் கழித்து அன்ட் மேன் டைம் கொல்லூசின் (time collusion)-ல் இருந்து வெளியே வருகிறார். இந்த இயந்திரத்தில் 5 வருடங்கள் பயணித்து நேரத்தை கடந்து வந்துள்ளார். இதனை கண்ட அவெஞ்சர்ஸ் நேரத்தை கடக்கும் இயந்திரத்தை கொண்டு காலங்களை கடந்து சென்று மந்திரக்கற்களின் சக்திகளை மீண்டும் திரட்டுகிறார்கள்.

  பின்னர் சக்தியை பெற்ற மந்திரக்கற்களை கொண்டு உலகத்தில் தானுஷால் அழிந்துபோன மக்களை வரவழைக்க ஹல்க் தனது கையில் மந்திரக்கற்களின் உரையை மாட்டிக்கொண்டு ஷோடக்கு போடுகிறார். பின்னர் அழிந்து போன தானுஷும் எதிர்பாராமல் சில சூழ்ச்சிகள் செய்து அவ்விடத்திற்கு வருவதால் அங்கு போர் முகிழ்கிறது. இறுதியில் அவெஞ்சர்ஸ் தானுஸை எதிர்கொள்ள எவ்வித சூழ்ச்சிகளை பயன்படுத்திகிறார்கள் என்பதே படத்தின் கதை.

  ரிலீஸ்
  இத்திரைப்படத்திற்கு தமிழில் ஏ.ஆர்.ரகுமான் மார்வெல் ஆண்தேம் என்று ஆல்பம் ஒன்று பாடி வெளியிட்டுள்ளார். இத்திரைப்படத்தின் பணிகள் முடிவடைந்தவுடன் பிறநாடுகளில் டப்பிங் பணியிற்காக செலுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் இணையதளங்களில் பரவலாக பரவி வருகிறது. இதன் தொடர்பாக அவெஞ்சர்ஸ் படக்குழு இச்செயல்களை கண்டித்து ஏப்ரல் 17ல் அறிக்கையும் வெளியிட்டுள்ளது.

  வசூல்
  இப்படத்தின் வசூல் $2,789,987,193 தொகையினை வசூலித்து உலகளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. 2009-ஆம் ஆண்டு முதல் முதலிடத்தை பிடுத்துவந்துள்ள அவதார் திரைப்படத்தின் ($2,787,965,087) வசூலை 2019 ஜூலை மாதம் இத்திரைப்படம் முடியடித்துள்ளது.

  பின்னர் இத்திரைப்படத்தில் கமோரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ஜோ சல்டனா அவர்கள் அவதார் திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வசூல் ரீதியாக உலகளவில் உள்ள முதல் இரண்டு திரைப்படங்களின் நடிகை என புகழ் பெற்றுள்ளார்.   **Note:Hey! Would you like to share the story of the movie அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).