twitter

    அயலான் கதை

    அயலான் - இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு என பல தமிழ் திரைப்பட பிரபலங்கள் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள அறிவியல் புனைவு திரைப்படம். இப்படத்தினை தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான கொட்டப்படி ஜே ராஜேஷ் தனது KJR தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் 'இசைப்புயல்' ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் தங்களின் குடுப்பதோடு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள அயலான் படத்தினை ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாஹ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ரூபன் எடிட்டிங் செய்துள்ளார்.



    தமிழ் & தெலுங்கு மொழியில் உருவாகி பல மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ஒரு பான் இந்தியா படமாக 2024-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ள அயலான் திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது.


    அயலான் திரைப்படத்தின் கதை

    கதைக்கரு: பூமிக்கு வரும் ஒரு ஏலியன் சிவகார்த்திகேயன் மற்றும் அவரின் நண்பர்களின் உதவியில் பல அதிசயங்களை செய்து வருகிறது. பின் அந்த ஏலியன் மீண்டும் பூமியை விட்டு பாதுகாப்பாக ஏலியனின் கிரகத்திற்கு சென்றதா என்பதே இப்படத்தின் கதைக்கரு.

    கதை

    பேராசை பிடித்த பணக்காரர்கள் மேலும், மேலும் சொத்து சேர்க்க இந்த பூமியை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகின்றனர். வில்லனின் பேராசையால் 2030ல் இந்த பூமி அழிந்து விடும் என்பதை அறிந்து கொள்ளும் ஏலியன் பூமியை காப்பாற்ற புறப்பட்டு வருகிறது. ஹீரோ அர்ஜுன் (சிவகார்த்திகேயன்) உடன் விபத்து காரணமாக சந்திப்பு ஏற்படுகிறது.

    வில்லன் ஒருவர் ஒட்டுமொத்தமாக அழிக்கத் திட்டமிட்டு இருப்பதை வேற்று கிரகத்தில் இருந்து கவனிக்கும் ஒரு ஏலியன் பூமிக்கு வந்து அந்த வில்லனிடம் இருக்கும் பொருளை எடுக்க முயற்சி செய்கிறது. ஆனால், அந்த ஏலியனை அடைத்து வைத்து வில்லன் ஆராய்ச்சி என்கிற பெயரில் சித்ரவதை செய்ய அந்த ஏலியனுக்கு நம்ம ஹீரோ சிவகார்த்திகேயன் எப்படி உதவி செய்கிறார் என்பது தான் இந்த அயலான் படத்தின் கதை.

    அயலான் திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள்

    அயலான் திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் படக்குழு சார்பில் வெளியானது. 2016ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் 24 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ரெமோ, வேலைக்காரன், சீமராஜா என மூன்று படங்கள் உருவாகிறது, மேலும் நான்காவது படமாக அயலான் படத்தினை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    2015ல் இன்று நேற்று நாளை படத்தினை இயக்கி வெற்றி இயக்குனராக தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட இயக்குனர் ரவிக்குமார், சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க ஒரு ஏலியன் படத்தினை உருவாக்க திட்டமிட்டார். அதன்படி முதற்கட்ட அறிவிப்புகள் மற்றும் திரைக்கதை வடிவமைப்பு பணிகளில் ஈடுபட்ட ரவிக்குமார் 2018ஆம் ஆண்டு இப்படத்திம் படப்பிடிப்புக்கு தயாராகி படப்பிடிப்பு பணிகளை தொடங்கினார்.

    2019ஆம் ஆண்டு நிதி பற்றாக்குறை காரணமாக அயலான் திரைப்படம் KJR  நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. படக்குழு அறிவுப்புகளை தொடர்ந்து பல படப்பிடிப்பை முடித்த அயலான் படக்குழு, இப்படம் முழுவதுமாக தயாராகி திரையரங்கிற்கு வெளியாக 5 வருட நேரங்களை எடுத்துக்கொண்டது. 5 வருடம் ஒரு படத்திற்காக பணியாற்றிய இயக்குனர் மற்றும் அயலான் படக்குழு பல போராட்டங்களை கடந்து இப்படத்தின் 2024 பொங்கல் பண்டிகைக்கு வெளியிட்டுள்ளனர். 

    அயலான் திரைப்படத்தின் பாடல்கள், CG காட்சிகள் எதிர்பார்ப்பை மீறி அற்புதமாக உருவாகி படக்குழுவை திருப்தி படுத்தியுள்ளது. இப்படத்திற்கு 4500 CG காட்சிகள் அமைத்துள்ளனர்.இப்படத்தின் CG காட்சி தொழிநுட்பத்திற்காக மொத்தம் 40 கோடிகள் வரை செலவு செய்துள்ளனர், படக்குழுவினர்.

    இப்படம் உருவாகி வெளியாகும் இறுதி நேரம் வரை இப்படத்திற்கு பல பிரச்சனைகள் தொடர்ந்து வருகிறது. 2021 டிசம்பர், 2022 ஜனவரி, 2023 ஏப்ரல், 2023 நவம்பர் (தீபாவளி), 2023 டிசம்பர் ஆகிய தேதிகளை கடந்து இப்படம் பல போராட்டங்களை சந்தித்து இறுதியில் 2024 ஜனவரி 12ல் பொங்கல் பண்டிகை ஸ்பெஷல் ரிலீஸ் படமாக வெளியாகியுள்ளது.
    **Note:Hey! Would you like to share the story of the movie அயலான் with us? Please send it to us ([email protected]).