twitter
    Tamil»Movies»Ayogya»Story

    அயோக்யா கதை

    அயோக்யா இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராசி கண்ணா, பார்த்திபன் நடிக்கும் அதிரடி ஆக்ஷன், த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் மது தயாரிக்க இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் காவலராக நடிகர் விஷால் நடிக்கிறார்.

    2015-ம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வெற்றிபெற்ற "டேம்பர்" என்னும் தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது.

    கதை 

    இப்படத்தின் நாயகனான விஷால் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து வருகிறார். இவர் சிறுவயதிலே பணத்தின் மேல் மோகம் கொள்கிறார், சிறுவயதில் காவல் துரையின் ஒழுக்கமற்ற செயலை கண்ட இவர், காவலரை போல் லஞ்சம், மாமூல் ஆகியவை பெற்று செல்வந்தனாக வேண்டும் என ஆசை கொள்கிறார். இக்காரணத்தால் இவர் காவலராக வேண்டும் என்று வெறி கொண்டு படித்து காவலராகிறார்.

    இவர் காவலராக பொறுப்பேற்றவுடன், இவர் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை சார்ந்த ரௌடிகளை சந்தித்து மாமூல் போன்றவற்றினை பேரம் பேசுகிறார். அனைத்து இடங்களிலும் ரௌடிகளுக்கு ஆதரவாய் உள்ளார். இதனை கண்டு இவரை பலமுறை எச்சரிக்கிறார், நேர்மையான கான்ஸ்டேபிள் கே.எஸ்.ரவிக்குமார். பின்னர் விலங்கு பாதுகாவலராக இருக்கும் ராசி கன்னா மீது முதல் பார்வையிலே காதல் கொள்கிறார்.

    இவர் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் பெண்களை ஒரு குழுவாக பலாத்காரம் செய்து கொன்று வருகிறார்கள். இதனை கண்டறிந்த இவர் குற்றவாளிகளை தப்பவைக்கிறார். பின்னர் இச்ச்செயலானது கொடூரமாக திரும்புகிறது. இதனால் மனம் திருந்துகிறார் விஷால். இவர் மனம் திருந்தியதால் இவருக்கு நடக்கும் விபரீதங்கள், பின்னர் அதனை விஷால் எப்படி எதிர் கொள்கிறார் என்பதே படத்தின் கதை.

    ரிலீஸ் 

    10.05.2019 - 'அயோக்யா' திரைப்படம் வெளியாவதை தொடர்ந்து திரையரங்கின் முன் பேனர், கட் அவுட் ஆகியவை தயார் செய்து முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ஆவலுடன் குவிந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் இன்று இல்லை என திரையரங்கு நிர்வாகிகள் கூறியுள்ளர்னர். மேலும் இப்படத்திற்காக முன்பதிவு செய்யப்பட்ட பணத்தை திரும்ப அவரவர் வங்கி கணக்கில் திருப்பி அனுப்பப்படும் என திரையரங்கு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் இப்படத்தின் நடிகரும், தமிழக திரைப்பட தயாரிப்பு சங்க தலைவருமான நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில்  "அயோக்யா ரிலீசுக்காக அனைத்து முயற்சிகளும் எடுத்துவிட்டேன், இருப்பினும் என்னால் முடியவில்லை. எனக்கென ஒரு நாள் வரும், அதுவரை என் பயணத்தை தொடர்வேன்" என்று கூறியுள்ளார்.

    தயாரிப்பாளர் சங்கத்தின் தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து விஷால் நீதிமன்றம் சென்றுள்ள நிலையை தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இத்திரைப்படமானது மே 11ல் வெளியானது.



    **Note:Hey! Would you like to share the story of the movie அயோக்யா with us? Please send it to us ([email protected]).