twitter
    Tamil»Movies»Ayogya
    அயோக்யா

    அயோக்யா

    U/A | 2 hrs 30 mins | Action
    Release Date : 11 May 2019
    2.5/5
    Critics Rating
    4/5
    Audience Review
    அயோக்யா இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராசி கண்ணா, பார்த்திபன் நடிக்கும் அதிரடி ஆக்ஷன், த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் மது தயாரிக்க இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் காவலராக நடிகர் விஷால் நடிக்கிறார்.

    2015-ம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வெற்றிபெற்ற "டேம்பர்" என்னும் தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக்காக இப்படம்...
    • வெங்கட் மோகன்
      வெங்கட் மோகன்
      Director
    • மது பி
      மது பி
      Producer
    • சாம் சி எஸ்
      சாம் சி எஸ்
      Music Director
    • பில்மிபீட்
      2.5/5
      படம் சொல்ல வரும் செய்தி சமூகத்துக்கு மிகவும் அவசியமானது. ஆனால் அதை சொன்னவிதத்தில் தான் மசாலா நெடி மிக அதிகமாக இருக்கிறது. மூளைக்கு வேலையே கொடுக்காமல், அயோக்யாவை ஒரு கமர்சியல் சினிமாவாக மட்டும் பார்த்தால் நிச்சயம் ரசிக்கலாம்.

      கேடுகெட்ட போலீஸ் அதிகாரியாக வரும் விஷால், அந்த கதாபாத்திரத்தின் மீது கோபம் வரும் அளவுக்கு நடித்திருக்கிறார். வழக்கம் போல் ஆக்ஷன் காட்சிகளில் பட்டய கிளப்புகிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் ஹீரோயிச இமேஜை உடைத்தெறிந்ததற்கு பாராட்டத்தக்கது விஷால். தெலுங்கு ஹீரோக்களுக்கு இந்த துணிச்சல் வராது.

      ராஷி கண்ணாவுக்கு வழக்கமான ஹீரோயின் வேடம் தான். அழகாக இருக்கிறார். மனதை கொள்ளை கொள்கிறார். கொஞ்சம், கொஞ்சம் நடித்தும் இருக்கிறார்.

      பக்கா மசாலா படமாக இருந்தாலும், நல்ல மெசேஜ் சொன்னதால் மன்னிக்கப்படுகிறான் இந்த அயோக்யா...