X
பாகுபலி 2

பாகுபலி 2

History | 28 Apr 2017 | U |
Tamil

2.5 /5 Users

4.5 /5 Filmibeat

பாகுபலி 2 கதை

பாகுபலி 2 ராஜமௌலி இயக்கத்தில் உருவான திரைப்படம். இத்திரைப்படம் பாகுபலி திரைப்படத்தின் அடுத்த பாகம் ஆகும். இத்திரைப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, சத்யராஜ், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கின்றார். கதை :  கதை ஆரம்பத்தில், முதல் பாதியின் தொடர்ச்சியாக படம் தொடர்கிறது. போரில் காலகேயனை கொன்றுவிட்டு, பிரபாஸை மகிழ்மதி அரசாங்கத்தின் அரசனாகவும், ராணாவை படைத் தளபதியாகவும் ராஜமாதாவான ரம்யாகிருஷ்ணன் பிரகடனம் செய்கிறார். அதன்பிறகு, பிரபாஸுக்கு அரசனாக முடிசூட்ட பட்டாபிஷேகம் செய்ய நாட்கள் குறிக்கிறார்கள். இதற்கிடையே, அரசனாக இல்லாமல் மக்களோடு மக்களாக கலந்து அவர்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்வதற்காக பிரபாஸை பல்வேறு தேசங்களுக்கு ரம்யா கிருஷ்ணன் அனுப்பி வைக்கிறார். கூடவே கட்டப்பாவும் (சத்யராஜ்) செல்கிறார். அவ்வாறு பிரபாஸ் செல்லும்போது குந்தலதேசத்தில் கொள்ளையர்களால் நிறைய மக்கள் கொல்லப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். அதேநேரத்தில், குந்தலதேசத்தின் யுவராணியான தேவசேனாவை (அனுஷ்கா) பார்க்கிறார். வாள் வீச்சில் அத்தனை பேரையும் அடித்து துவம்சம் செய்யும் அவரது வீரத்தை கண்டு வியக்கிறார். மேலும், அவரது அழகிலும் மயங்கி காதல் கொள்கிறார்.  அவரிடம்  தன்னை அப்பாவியாக காட்டிக்கொண்டு, கவர திட்டமிடுகிறார், பிரபாஸ். இந்நிலையில், பிரபாஸும், சத்யராஜும் குந்தலதேசத்தில் இருக்கிறார்கள் என்று ஒற்றன் மூலமாக அரண்மனையில் இருக்கும் ராணாவுக்கு தகவல் செல்கிறது. அந்த தகவலில் பிரபாஸ், அனுஷ்காவை காதலித்து வருவதாகவும் செய்தி இருக்கிறது. உடன் அனுஷ்காவின் ஓவியமும் இருக்கிறது. அனுஷ்காவின் ஓவியத்தை பார்த்து ராணாவுக்கும் அவர் மீது ஈர்ப்பு வருகிறது. அவளை தன்னுடைய மனைவியாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கிறார். இதை தனது அம்மாவிடம் சொல்ல, அவரும் ராணாவுக்கு அனுஷ்காவை திருமணம் செய்துவைப்பதாக உறுதி கொடுக்கிறார். பெண் கேட்பதற்கு முன்பாக விலையுயர்ந்த பொருட்களை அனுஷ்காவின் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார் ரம்யா கிருஷ்ணன். தன்னுடைய வீட்டுக்கு நேரில் வந்து பெண் கேட்க தைரியமில்லாமல், தன்னை ஒன்றும் இல்லாதவர் போல் விலையுயர்ந்த பொருட்களை அனுப்புகிறார்களே என்று பதிலுக்கு அனுஷ்கா, அவர்களை அவமானப்படுத்தும் வகையில் பதில் கடிதம் ஒன்றை அனுப்புகிறார். இதனால் ராஜமாதாவான ரம்யா கிருஷ்ணன் கோபமடைகிறார். உடனே, அனுஷ்காவை கைது செய்துவர ஆணையிடுகிறார்கள். அந்த நேரத்தில் பிரபாஸ் அங்கிருக்கும் விஷயத்தை நாசர், ரம்யா கிருஷ்ணனிடம் சொல்ல, அவர் மூலமாகவே அனுஷ்காவை கைது செய்து அழைத்துவர தூது அனுப்புகிறார்கள். அதற்குள் குந்தல தேசத்தில் கொள்ளையர்கள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்களை எதிர்க்க குந்தலதேசத்து வீரர்கள் திணறிக்கொண்டிருக்கும் வேளையில், பிரபாஸ் உள்ளே புகுந்து அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார். அவரது வீரத்தை கண்டு குந்தலதேசமே வியந்து நிற்கிறது. அப்போதுதான், பிரபாஸ் மகிழ்மதி அரசாங்கத்தின் இளவரசர் பாகுபலி என்ற விஷயத்தை கட்டப்பா போட்டு உடைக்கிறார். அதேநேரத்தில், அனுஷ்கா மீது அவர் காதல் கொண்டுள்ள விஷயத்தையும் கூறுகிறார். இதைக்கேட்டு குந்தலதேச மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகின்றனர். அதேநேரத்தில் மகிழ்மதி அரசாங்கத்தால் பறவை மூலமாக அனுப்பப்பட்ட தூது பிரபாஸ் கைக்கு கிடைக்கிறது. அன்னையின் கட்டளைப்படி அனுஷ்காவை கைது செய்யப்போவதாகவும், அதற்கு அனுஷ்கா ஒத்துழைக்கவேண்டும் என்றும் அன்பாக கூறுகிறார். முதலில் முரண்டு பிடிக்கும் அனுஷ்கா, அதன்பிறகு பிரபாஸ் அவளுடைய கற்புக்கும், மானத்துக்கும் எந்தவித குந்தகமும் விளைவிக்காமல் உயிருள்ளவரை உன்னுடன் இருப்பேன் என்று கொடுக்கும் வாக்கின் அடிப்படையில் அவனுடன் செல்ல முடிவெடுக்கிறாள். ஒருபக்கம் ராணாவுக்கு அனுஷ்காவை மணம் முடித்துக் கொடுப்பதாக ரம்யா கிருஷ்ணன் வாக்கு கொடுத்திருக்கிறார். மறுபக்கம் திருமணம் செய்துகொள்வேன் என்று அனுஷ்காவிட்ம் பிரபாஸ் வாக்கு கொடுத்திருக்கிறார். இந்த வாக்குகளால் யார் யாருக்கு? என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டது என்பதை படம் முழுக்க பல டுவிஸ்டு வைத்து மீதிக்கதை நகர்கிறது.
Read More

பாகுபலி 2 நடிகர்கள் & படக்குழுவினர்

பாகுபலி 2 அணியின் தகவல்

இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

பாகுபலி 2 விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
பாகுபலி 2 பார்த்துவிட்டேன். முதல் பாகம் தந்த அதி உச்ச பிரமாண்டமும் பிரமிப்பும், இரண்டாம் பாகம் எப்படி இருக்குமோ... சொதப்பிவிடுமோ... என்ற லேசான சந்தேகத்துடன்தான் படம் பார்க்கப்போனேன். ஆனால்... அடேங்கப்பா... 'பாகுபலிக்கு இணையாக ஹாலிவுட்டில் மட்டுமில்லை... உலக அளவில், அதுவும் வரலாற்றுக் கதைப் படம் ஒன்றைச் சொல்லுங்க பார்க்கலாம்' என்று கேட்க வைத்துள்ளது. வெறும் பிரமாண்டம் மட்டுமில்லை. அந்த பிரமாண்டத்தை அத்தனை நுணுக்கமாக, நேர்த்தியாக இதுவரை எந்த இயக்குநரும் செய்து காட்டியதில்லை. உலக அளவில் ஜேம்ஸ் காமரூன், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் போன்ற இயக்குநர்கள்தான் தங்கள் படங்களுக்காக புதுப் புது கண்டுபிடிப்புகளை உருவாக்கிப் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு இணையான ஒரு கண்டுபிடிப்பாளராக எஸ்எஸ் ராஜமௌலியைப் பார்க்க முடிந்தது இந்தப் படத்தில். இது வெறும் சரித்திக் கதைப் படம் மட்டுமல்ல... அந்த கதை நடந்த காலத்தில் மன்னர்கள் பயன்படுத்திய போர்க்கருவிகள், தொழில் நுட்பங்கள், விஞ்ஞான சாதனங்கள் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து அதற்கு வடிவம் கொடுத்திருக்கிறார் பாருங்கள்... ஆஹா.. அருமை. அதுவும் க்ளைமாக்ஸில் பனை மரங்களைப் பயன்படுத்தி அரண்மனைக்குள் போர்வீரர்கள் ஊடுருவும் காட்சி எல்லாம் கற்பனையின் உச்சம். இது முடியுமா... சாத்தியமா என்பதல்ல பிரச்சினை. அதை ரசிக்கும்படி, நம்பகத்தன்மையுடன் ராஜமௌலி காட்சிப்படுத்தி இருக்கும் விதம் சிலிர்க்க வைத்தது. படத்தில் இடைவேளை வரையிலான பகுதி முழுவதும் அத்தனை அழகு. அதுவும் அந்த அறிமுகக் காட்சியில் பார்த்த ஹீரோயிசத்தை இதற்கு முன் எந்தப் படத்திலும் பார்த்ததில்லை. காட்சிகளில் எது விஎஃப்எக்ஸ், எது ஒரிஜினல், எது செட்... ஒன்றையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. முதல் பாகத்துக்கு இத்தனை பர்ஃபெக்டான ஒரு இரண்டாம் பாகத்தை இதுவரை ஹாலிவுட் சினிமாவில் கூட யாரும் பார்த்திருக்க முடியாது. அனுஷ்கா... இப்படி ஒரு பேரழகியா என ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார் அந்த முதல் பகுதியில். அவரது அழகும், ஆக்ஷனும், குறிப்பாக அம்பெய்யும் அந்த லாவகமும் பிரமாதம். அவரைக் காதலிக்க பிரபாஸ் போடும் நாடகம் அம்பலமாகும் அந்த போர்க் காட்சியில் ஏதோ நாமே அங்கு இருப்பதைப் போல இரண்டறக் கலந்துவிடுகிறோம். பிரபாஸ் - ராணா. கதையின் நாயகர்கள். இருவரின் உழைப்பும், நடிப்புத் திறனும் அபாரம் என்பதெல்லாம் ரொம்ப ரொம்ப சின்ன வார்த்தைதான். அப்படியொரு வெறித்தனமான அர்ப்பணிப்பு மிரள வைக்கிறது. இருவருக்குமே கேரியரின் உச்சம் இந்தப் படம். வாழ்நாள் முழுக்க பாகுபலி பெருமை பேசிக் கொண்டே இருக்கலாம். இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளரைவிட, விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப நிபுணர்களின் பங்களிப்புதான் அதிகம். மிரட்டிவிட்டார்கள். எம்எம் கீரவாணியின் இசை மிகப் பிரமாதமாக கைகொடுக்கிறது படத்துக்கு. ஒரு ஊரில் ஒரு ராஜா.. பாடலும் இசையும் இன்னும் காதுகளிலேயே ரீங்கரிக்கிறது. சமீப நாட்களில் கேட்ட மிக இனிய பாடல். பின்னணி இசை, தீம் பாடல்கள் அனைத்துமே வேற லெவல்! படத்தில் ராஜ மாதா ரம்யா கிருஷ்ணன் வேடம்தான் சற்று பிசகிவிட்டது. சொந்த மகனுக்காக அத்தனை ஒருதலைப்பட்சமாகவா ஒரு ராஜமாதா நடந்து கொள்வாள்? என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை. வேறு குறைகளே இல்லையா... என்றால்... நிறையவே சொல்ல முடியும். ஆனால் கதையின் வேகம்... அதைக் காட்சிகளாக்கிய விதம், உச்சபட்ச அழகியலோடு கூடிய பிரமாண்டம்... இவற்றுக்கு மத்தியில் அந்தக் குறைகள் எதுவும் கண்ணுக்கே தெரியவில்லை எனும்போது, நாம் எதற்கு பூதக்கண்ணாடி வைத்துத் தேட வேண்டும்? நூறாண்டு கால இந்திய சினிமாவின் பெருமைக்குரிய படைப்பாக வந்திருக்கிறது பாகுபலி 2. இந்தப் படத்தின் முதல் பாகம் பார்த்துவிட்டு, 'பேசித் தீராத பிரம்மாண்டம்' என விமர்சனம் தந்திருந்தேன். இந்த இரண்டாம் பாகத்தைப் பார்த்த பிறகு... எப்படி சந்திரலேகா இன்றுவரை ஒரு உதாரணப் படமாகச் சொல்லப்படுகிறதோ... அதைவிட பல மடங்கு பெருமையுடன் பேச வைக்கும் படமாக வந்திருக்கிறது பாகுபலி 2 என்று சொல்லத் தோன்றுகிறது!

பாகுபலி 2 திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

பாகுபலி 2

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+