twitter

    பயில்வான் கதை

    பயில்வான் இயக்குனர் எஸ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சுதீப் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஸ்வப்னா கிருஷ்ணா தயாரிக்க, இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்ய இசையமைத்துள்ளார்.

    அதிரடி மற்றும் திரில்லர் படமாக உருவாகும் பயில்வான் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கருணாகர எ, யுடன் படத்தொகுப்பாளர் ரூபன் பணியாற்றியுள்ளார்.

    பயில்வான் திரைப்படத்தின் தகவல்கள்

    நடிகர் சுதீப் முக்கிய பங்கில் உருவாகும் பயில்வான் திரைப்படம், 2019 செப்டம்பர் 12ல் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் டப் செய்து வெளியாகவிருக்கிறது. 2018-ஆம் ஆண்டு வெளியான கே ஜி எஃப் (சேப்டர் 1) திரைப்படத்தினை தொடர்ந்து தமிழில் டப் செய்து வெளியாகும் மூன்றாவது கன்னட திரைப்படமாகும் பயில்வான்.

    இத்திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் கதைக்கரு ஹிந்தியில் 2016-ஆம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் கதையை போலவே இருக்கிறது என்று சுல்தான் படத்தின் ரீமேக் என கன்னட மற்றும் ஹிந்தி ரசிகர்கள் விமர்சித்து வந்துள்ள நிலையில், இத்திரைப்படம் சுல்தான் படத்தின் ரீமேக் இல்லை என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் பயில்வான் படக்குழுவினர்.

    பயில்வான் திரைப்படத்தின் கதை

    குஸ்தி வீரராக பல சாதனைகளை படைத்துள்ள சுனியில் ஷெட்டி, அனாதையாக இருக்கும் நாயகன் சுதீப்-ற்கு அடைக்கலம் தந்து, குஸ்தி ஆசிரியராக சுதீப்-ற்கு குஸ்தி கற்றுத்தந்து அவரை குஸ்தி வீரனாக மாற்றுகிறார். இவரை இந்திய அளவில் குஸ்தி வீராக மாற்ற பாடுபட்டு வருகிறார் ஷெட்டி. தனக்கு அறிந்த குஸ்தி கலையினை அதிரடிக்காக பயன்படுத்துகிறார் சுதீப், மேலும் இவர் வாழ்க்கையில் காதல் மலர்கிறது. காதலியுடன் அதிக நேரங்களை கடக்கும் சுதீப்-ற்கும் ஷெட்டிக்கும் பிரச்சனை வாழ்கிறது.

    இதனால் மனமுடைந்த சுனியில் ஷெட்டி, இவரை கண்டித்து ஒரு குஸ்தி போட்டியில் பங்கேற்க வைக்கிறார். குஸ்தி போட்டியில் களமிறங்கும் சுதீப் பின்னர், அங்குள்ள அனாதை குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ப பாக்ஸராக பாக்ஸிங் போட்டியில் பங்கேற்கிறார். குஸ்தி கலையினை மட்டும் அறிந்த சுதீப் பாக்ஸிங் போட்டியில் எவ்வாறு போராடுகிறார் எனபதே படத்தின் கதை.




    **Note:Hey! Would you like to share the story of the movie பயில்வான் with us? Please send it to us ([email protected]).