X
தமிழ் » திரைப்படங்கள் » கே ஜி எஃப் (சேப்டர் 1)
கே ஜி எஃப்

கே ஜி எஃப்

Action | Crime | War | 21 Dec 2018 | U/A |
Tamil

2.8 /5 Users

3 /5 Filmibeat

கே ஜி எஃப் கதை

கே ஜி எஃப் (சேப்டர் 1) தமிழ், கன்னட, தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும்  தயாராகி உள்ள வரலாற்றுமிக்க அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்க, யஷ்,  ஸ்ரீநிதி ஷெட்டி, தமன்னா, மௌனி ராய் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுர் தயாரிப்பில், இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். மேலும் புரட்சி தளபதி விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி (வி எஃப் எஃப்)  தமிழில் இப்படத்தினை வெளியிட்டுள்ளது.  மேலும் படத்தில்1980 மற்றும் 2018 ஆம் ஆண்டு, என்று இரு காலக்கட்டங்கள் காட்டப்படுகிறது. இரு காலக்கட்டத்திலும் பல்வேறு கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தபடுகிறது. இதை இயக்குநர் சரியாக கையாண்டதால் திரைக்கதை விறுவிறுப்பாக நகர்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற ட்வீஸ்ட் படம் முழுமையிலும் உள்ளது. கதை   சாதாரண குடும்பத்தை சேர்ந்த ராக்கி (யஷ் ) என்ற துறுதுறு இளைஞர், தன் தாயின் கட்டளை படி, வாழ்க்கையில் தான் பணம் மற்றும் அதிகாரம் படைத்த நபராக மரணம் அடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறார். தன் தாயின் இறப்பிற்கு பின்னர் பெங்களூரிலிருந்து வெளியேறி மும்பை தெருக்களில் சுற்றித்திரிந்த ராக்கி கொடுரமான ரௌடியாக சித்தரிக்கப்படுகிறார், இவரின் பெயர் எட்டுத்திக்கும் பரவ, இதன் காரணமாக இவருக்கே தெரியாமல் பலர் சூழ்ச்சியால் கோலார் தங்க வயலுக்குள் வருகிறார்.  கன்னட நடிகர் யாஷ், ராக்கி கதாபாத்திரல் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்கு வேறு யாரும் இதுபோல பொருந்தியிருக்க வாய்ப்பில்லாத அளவுக்கு நடித்துள்ளார். படத்தின் முதல் பாகம் சற்று நீளமாக இருந்தாலும் கதைக்கு தேவைப்படுவதாக உள்ளது.  இவர் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு மிஷனை கையில் எடுக்கிறார். 1980 ஆண்டுக்கு முன்னோக்கி செல்லும் அவருக்கு கொடுக்கப்படும் மிஷனே கோலார் தங்க வயலின் அதிகாரம் படைத்த நபரை கொள்வதுதான். அந்த மிஷன் முடிவில் அவர் கொடுரமான வில்லனாக சித்தரிக்கப்படுகிறார். அந்த மிஷனில் என்ன நடக்கிறது என்பதே கதை.
Read More

கே ஜி எஃப் நடிகர்கள் & படக்குழுவினர்

கே ஜி எஃப் அணியின் தகவல்

இயக்குனர் பிரசாந்த் நீல்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ரவி பஸ்ரூர்
தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுர், விஷால் கிருஷ்ணா
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கே ஜி எஃப் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
அசால்ட்டான உடல் மொழி, திமிரு பிடித்த பார்வை, எதையும் துணிந்து செய்யும் நெஞ்சுறும், யாருக்கும் பயப்படாத மன தைரியும்... இது தான் ராக்கி கதாபாத்திரம். மிக கச்சிதமாக செய்திருக்கிறார் கன்னடத்தின் ராக்கிங் ஸ்டார் யாஷ். ஒவ்வொரு அடியும் இடி மாதிரி விழுகிறது. காதல், கருணை, கோபம், வெறி, நிதானம் என நடிப்பில் அசத்துகிறார். படத்தின் மற்றொரு ஹீரோ ஒளிப்பதிவாளர் புவன் கவுடா. கோலார் தங்க வயல் காட்சிகள் எல்லாம், அந்த இடத்தை அப்படியே நம் கண்முன் நிறுத்துகின்றன. குழப்பமான திரைக்கதையை தனது தெளிவான எடிட்டிங்கால் நேர்க்கோட்டில் பயணிக்க வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த். ஆனாலும் மேக்கிங்கில் அசத்தியிருக்கிறார்கள். கோலார் தங்க சுரங்கத்தை அச்சு அசலாக கண்ணில் காட்டியதற்காக, இந்த கேஜிஎப் - ஐ வரவேற்போம்.

கே ஜி எஃப் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.8 /5 Your Rating

கே ஜி எஃப்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+