பகாசூரன் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நட்டி நடராஜன் மற்றும் செல்வராகவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி 'ஜி எம் கார்ப்பரேஷன்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பகாசூரன் படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
அதிரடி - திரில்லர் திரைக்கதையில் தமிழ் சினிமா ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் தேவராஜ் எஸ் எடிட்டிங் செய்துள்ளார்.
பகாசூரன் படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/எ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் 2023 பிப் 17ல் உலகமெங்கும் வெளியாகிறது.
பகாசூரன் திரைப்படத்தின் கதை
கதைக்கரு
அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் செல்வராகவன், நாடக காதல் காரணத்தால் தனது மகளை இழக்கிறார். தன் மகளை ஏமாற்றி கொலை செய்த நபர் மற்றும் அவர்களை போல இந்த சமூகத்தில் பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கும் சில விஷமிகளை தேடி கொலை செய்து வருகிறார். இறுதியில் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.
பகாசூரன் திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள்
பகாசூரன் திரைப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி, இப்படத்திற்கு முன் திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தினை பெற்றுள்ளார். இவரின் படங்களுக்கு பல தரப்புகளில் இருந்து பல்வேறு சர்ச்சைகளை கிளம்புகிறது.
மோகன் ஜி இயக்கிய முந்திய படங்களில் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடித்திருந்தார். தற்போது பகாசூரன் படத்தில் செல்வராகவன் & நட்டி நடராஜன் முன்னணி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண்களுக்கு எதிராக இந்த சமூகத்தில் நடக்கும் சில விஷயங்களை வெளிப்படையாக இப்படத்தில் மூலம் இயக்குனர் மோகன் ஜி எடுத்துரைத்துள்ளார்.
இப்படத்தின் நாயகன் செல்வராகவன் மற்றும் அவரது தம்பி தனுஷின் வாத்தி திரைப்படம், ஒரே நாளில் வெளியாகிறது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படங்களுக்கு தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பு உள்ள நிலையில், இவர்கள் நாயகனாக நடித்துள்ள இந்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் தமிழ் திரையுலகில் சற்று சலசலப்பு எழுந்துள்ளது.
ரிலீஸ்
பகாசூரன் படத்தின் அறிவுப்பு 2022 ஏப்ரல் 16ல் இணையதள ட்விட்டர் பக்கத்தில் படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியானது. 2023, பிப்ரவரி 17ல் வெளியாகும் இப்படத்திற்கு தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளன.
இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் சிவா சிவாயம் பாடல் வெளியாகி தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று ட்ரெண்டிங் ஆகியுள்ளது. பின்னர் இப்படத்தின் தீம் மியூசிக் பாடல் வெளியாகி தமிழ் சினிமாவில் பிரபலமானது.