பாஸ்கர் ஒரு ராஸ்கல் இயக்குனர் சித்திக் இயக்கத்தில், அரவிந்த் சாமி, அமலா பால், ரமேஷ் கண்ணா நடிக்கும் காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம்.
மலையாளத்தில் 2015 -ம் ஆண்டு நயன்தாரா மற்றும் மம்மூட்டி நடிப்பில் வெளிவந்த பாஸ்கர் தி ராஸ்கல் என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் தற்போது தமிழில் உருவாகியுள்ளது.
கதை :
மனைவியை இழந்த கணவன் (அரவிந்த் சாமி ) தன் மகனுடன் (ராகவன்) வாழ்ந்து வருகிறார். கணவன் இல்லாமல் வாழ்ந்து வரும் மனைவி ( அமலா பால் ) தன் மகளுடன் (நைனிகா) வாழ்ந்து வருகிறார். ராகவனும் நைனிகாவும் தங்களது பெற்றோர்களை சேர்த்து வைக்க முடிவு செய்கிறார்கள். ஆனால், அரவிந்த் சாமியும், அமலா பாலும் வாழ்க்கையில் ஒன்று சேருவதற்கு பல பிரச்சனைகள் வருகிறது. அது என்ன பிரச்சனை, அதிலிருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பதே மீதிக்கதை.