X
தமிழ் » திரைப்படங்கள் » பாஸ்கர் ஒரு ராஸ்கல்
பாஸ்கர் ஒரு ராஸ்கல்

பாஸ்கர் ஒரு ராஸ்கல்

Family | 17 May 2018 | 143 Mins
Tamil

2.5 /5 Users

0 /5 Filmibeat

பாஸ்கர் ஒரு ராஸ்கல் கதை

பாஸ்கர் ஒரு ராஸ்கல் இயக்குனர் சித்திக் இயக்கத்தில், அரவிந்த் சாமி, அமலா பால், ரமேஷ் கண்ணா நடிக்கும் காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம்.  மலையாளத்தில் 2015 -ம் ஆண்டு நயன்தாரா மற்றும் மம்மூட்டி நடிப்பில் வெளிவந்த பாஸ்கர் தி ராஸ்கல் என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் தற்போது தமிழில் உருவாகியுள்ளது. கதை :   மனைவியை இழந்த கணவன் (அரவிந்த் சாமி ) தன் மகனுடன் (ராகவன்) வாழ்ந்து வருகிறார். கணவன் இல்லாமல் வாழ்ந்து வரும் மனைவி ( அமலா பால் ) தன் மகளுடன் (நைனிகா) வாழ்ந்து வருகிறார். ராகவனும் நைனிகாவும் தங்களது பெற்றோர்களை சேர்த்து வைக்க முடிவு செய்கிறார்கள். ஆனால், அரவிந்த் சாமியும், அமலா பாலும் வாழ்க்கையில் ஒன்று சேருவதற்கு பல பிரச்சனைகள் வருகிறது. அது என்ன பிரச்சனை, அதிலிருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பதே மீதிக்கதை. 
Read More

பாஸ்கர் ஒரு ராஸ்கல் நடிகர்கள் & படக்குழுவினர்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் அணியின் தகவல்

இயக்குனர் சித்திக்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை அம்ரேஷ் கணேஷ்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

பாஸ்கர் ஒரு ராஸ்கல் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
முரட்டு ராஸ்கல் பாஸ்கராக அர்விந்த்சாமி. பளபள சட்டை, காட்டன் வேட்டி, முறுக்கு மீசை, தங்க சங்கிலி என கேரக்டருக்கு ஏத்த கெட்டப். ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டும் அர்விந்தசாமி, மகனை பாசத்துடன் அரவணைப்பது, சூரி, ரோபோ சங்கருடன் சேர்ந்து காமெடி செய்வது, அமலா பால் மீது காதல் கொண்டு அப்பாவியாக நிற்பது, எதிரிகளை துவம்சம் செய்வது என ஒரு பக்கா கமர்சியல் ஹீரோவாக மீண்டும் வந்திருக்கிறார். ஏழு வயது பெண் குழந்தைக்கு தாயாக அமலா பால். அதற்காக ரசிகர்களை அவர் ஏமாற்றவில்லை. நைனிகாவின் மாடர்ன் அம்மாவாக, விதவிதமான கவர்ச்சி ஆடைகளில் படம் முழுக்க வலம் வருகிறார். தன்னை புரிந்துகொள்ள மறுக்கும் மகளை நினைத்து வேதனைப்படுவது, காதல் கணவனை இழந்து தவிப்பது, அர்விந்த்சாமியின் காதலை முதலில் நிராகரிப்பது என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பழக்கமான காட்சிகள் என்றாலும், தன் சிறப்பான நடிப்பின் மூலம் மனதில் நிற்கிறார் அமலா பால். படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் குழந்தைகள் நைனிகாவும், ராகவும். எல்லா சினிமாக்களையும் போல குழந்தை நட்சத்திரங்கள் செய்யும் பெரியமனித வேலைகளை இவர்களும் பார்க்கிறார்கள். தனது அம்மாவை நண்பனின் அப்பாவுடன் சேர்த்து வைப்பதற்காக போராடும் க்யூட் நைனிகா அப்லாஸ் அள்ளுகிறார். தந்தைக்கு மேனர்ஸ் என்றால் என்றால் என்ன என்பது பற்றி பாடம் எடுப்பது, அம்மா பாசத்துக்காக ஏங்கி நிற்பது என மாஸ்டர் ராகவும் கைத்தட்டல் வாங்குகிறார். சும்மா இருக்கும் போது, கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் செய்ய நினைத்தால் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்துக்கு போய் வரலாம்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

பாஸ்கர் ஒரு ராஸ்கல்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+