For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பாஸ்கர் ஒரு ராஸ்கல் - படம் எப்படி இருக்கு?

  |

  Rating:
  2.5/5
  Star Cast: அரவிந்த்சாமி, அமலா பால், நாசர், சூரி
  Director: சித்திக்

  சென்னை: அப்பாவை இழந்த மகளும், அம்மாவை இழந்த மகனும் என இரு குழந்தைகள் சேர்ந்து தங்கள் அப்பா, அம்மாவை இணைத்து ஒரு புதுக்குடும்பம் உருவாக்க சேர்க்க செய்யும் தில்லாலங்கடி வேலைகளை காமெடி கலந்து சொல்லியிருக்கிறது பாஸ்கர் ஒரு ராஸ்கல்.

  நடிகர்கள் - அர்விந்த் சாமி, அமலா பால், நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, ஆஃப்தாப்ஷிவ்தசானி, சித்திக், மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா, தயாரிப்பு - ஹர்ஷனி மூவிஸ் எம்.ஹர்சினி, இயக்கம் - சித்திக், இசை - அம்ரேஷ்

  Baskar oru rascal movie review

  அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என பிசியாக இருக்கும் தொழிலதிபர் பாஸ்கர் (அர்விந்த் சாமி). தாய் இல்லாத தனது மகன் ஆகாஷ் (மாஸ்டர் ராகவ்) மீது அதீத பாசத்தை வைத்திருக்கிறார். ஆனால் எதற்கெடுத்தாலும் அடி உதை, எந்த இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என தெரியாத தந்தையை வெறுக்கிறான் மகன். பிரச்சினைகளை கண்டால் விலகி நிற்கும் மகனுக்கும், தேடிப்போய் வம்பை விலைக்கு வாங்கும் தந்தைக்கும் நடுவே தாத்தா நாசர். இது ஒருபுறமிருக்க, அவர்களுக்கு அப்படியே நேர்மாறாக, தைரியமான மகள், அமைதியான தாய் என இருக்கிறார்கள் ஷிவானியும் (நைனிகா), அனுவும் (அமலா பால்). ஒரே பள்ளியில் படிக்கும் நைனிகாவும், ராகவும், ஒரே குடும்பமாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக தங்கள் பெற்றோரை ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். குழந்தைகள் இணைந்து பெற்றோர்களை ஒன்று சேர்த்தார்களாக என்பது அக்ஷன், காமெடி, திரில்லர் கலந்த மீதிக்கதை.

  முரட்டு ராஸ்கல் பாஸ்கராக அர்விந்த்சாமி. பளபள சட்டை, காட்டன் வேட்டி, முறுக்கு மீசை, தங்க சங்கிலி என கேரக்டருக்கு ஏத்த கெட்டப். ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டும் அர்விந்தசாமி, மகனை பாசத்துடன் அரவணைப்பது, சூரி, ரோபோ சங்கருடன் சேர்ந்து காமெடி செய்வது, அமலா பால் மீது காதல் கொண்டு அப்பாவியாக நிற்பது, எதிரிகளை துவம்சம் செய்வது என ஒரு பக்கா கமர்சியல் ஹீரோவாக மீண்டும் வந்திருக்கிறார்.

  Baskar oru rascal movie review

  ஏழு வயது பெண் குழந்தைக்கு தாயாக அமலா பால். அதற்காக ரசிகர்களை அவர் ஏமாற்றவில்லை. நைனிகாவின் மாடர்ன் அம்மாவாக, விதவிதமான கவர்ச்சி ஆடைகளில் படம் முழுக்க வலம் வருகிறார். தன்னை புரிந்துகொள்ள மறுக்கும் மகளை நினைத்து வேதனைப்படுவது, காதல் கணவனை இழந்து தவிப்பது, அர்விந்த்சாமியின் காதலை முதலில் நிராகரிப்பது என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பழக்கமான காட்சிகள் என்றாலும், தன் சிறப்பான நடிப்பின் மூலம் மனதில் நிற்கிறார் அமலா பால்.

  படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் குழந்தைகள் நைனிகாவும், ராகவும். எல்லா சினிமாக்களையும் போல குழந்தை நட்சத்திரங்கள் செய்யும் பெரியமனித வேலைகளை இவர்களும் பார்க்கிறார்கள். தனது அம்மாவை நண்பனின் அப்பாவுடன் சேர்த்து வைப்பதற்காக போராடும் க்யூட் நைனிகா அப்லாஸ் அள்ளுகிறார். தந்தைக்கு மேனர்ஸ் என்றால் என்றால் என்ன என்பது பற்றி பாடம் எடுப்பது, அம்மா பாசத்துக்காக ஏங்கி நிற்பது என மாஸ்டர் ராகவும் கைத்தட்டல் வாங்குகிறார்.

  Baskar oru rascal movie review

  காமெடிக்காக சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா என நிறைய பேர். ஆனால் சித்திக் படங்களின் வழக்கமான காமெடி இதில் மிஸ்ஸிங். ஒரு சில காட்சிகளில் சிரிக்க வைக்கும் சூரியும், ரோபோவும், பல இடங்களில் எரிச்சலை கிளப்பி 'அடே ராசுலோலு' என திட்டவைக்கிறார்கள்.

  மலையாளத்தில் எடுத்த பாஸ்கர் தி ராஸ்கலை, லேசாக டிக்கரிங் பார்த்து தமிழில் தந்திருக்கிறார் இயக்குனர் சித்திக். இடைவேளை டிவிஸ்ட் வரை கலகலப்பாக செல்கிறது படம். ஆனால் பின்பாதி எங்கெங்கோ சென்று கொல்கத்தாவில் முட்டி நிற்கிறது. இன்னும் எத்தனை வருஷத்துக்கு தான் பாஸ் ஹீரோ பறந்து, பறந்து அடிப்பார். ஆடியன்ஸ் பாவமில்ல அதுவும் மகன் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் போது அந்த கிளைமாக்ஸ் பைட்.... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... முடியல. ஏற்கனவே குழந்தைகளிடம் செல்போன் தாக்கம் அதிகமாகி வருகிறது. இதனால் அவர்களது வளர்ச்சி பாதிக்கிறது என மருத்துவர்கள் ஒருபுறம் எச்சரித்துக் கொண்டிருக்க, இப்படத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள் தனியாக ஸ்மார்ட் போன் வைத்திருப்பது போன்ற காட்சிகள் தேவைதானா?

  நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரேஷ் தான் படத்தின் இசையமைப்பாளர். பாடல்கள் கேட்கும்படி தான் இருக்கின்றன. ஆனால் மனதில் நிற்க மறுக்கின்றன. உலகநாதனின் ஒளிப்பதிவு, கௌரி சங்கரின் படத்தொகுப்பு என எல்லாமே ஒரு பக்கா கமர்சியல் படத்துக்கு தேவையானதை செய்திருக்கிறது. சண்டை பயிற்சியாளர் பெப்சி விஜயன் தன்னை அப்டேட் செய்துக்கொள்ள வேண்டும். கிளைமாக்ஸ் சண்டை காட்சி அவ்வளவு மோசம்.

  சும்மா இருக்கும் போது, கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் செய்ய நினைத்தால் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்துக்கு போய் வரலாம்.

  English summary
  Two children raised by single parents tries to unite their parents to live a happy life. This is the main plot of Baskar oru Rascal movie.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X