பைசன் - இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், அழகம் பெருமாள், பசுபதி, லால் என தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தமிழ் சினிமா இயக்குனர் & தயாரிப்பாளரான பா ரஞ்சித் தனது நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் உடன் இணைந்து சமீர் நாயர், அதிதி ஆனந்த் ஆகிய தயாரிப்பாளர்கள் தயாரிக்க, இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
கதை
ஒரு இளைஞன், தனது கிராமத்தில் நிலவும் சமூக மற்றும் சாதி அடிப்படையிலான வன்முறைகளைக் கடந்து, ஒரு தொழில்முறை கபடி வீரராக உயர்வைப் பெற போராடும் பயணமே இந்தப் படத்தின் மையக் கதை.
வெளியீட்டு தேதி
பைசன் காளமாடன் அக்டோபர் 17, 2025 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.