பைரி - இயக்குனர் ஜான் கிளாடி இயக்கத்தில் சயீத் மஜீத், மேகனா எலென், விஜி சேகர் என பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் துரைராஜ் தயாரிக்க, இசையமைப்பாளர் அருண் ராஜ் இசையமைத்துள்ளார்.
பைரி கதை:
நாகர்கோயிலில் வசிக்கும் ஹீரோ ராஜலிங்கம் (சையத் மஜீத்) அப்பா, தாத்தாவை போல புறா பந்தயத்தில் ஈடுபட வேண்டும் என புறா வளர்த்து வருகிறார். கல்லூரிக்கு சென்று படித்து மகன் முன்னேற வேண்டும் என அம்மா விஜி சேகர் நினைக்க, புறா பந்தயத்தில் ஜெயிக்க நினைக்கும் ஹீரோவுக்கு சூழ்ச்சியால் வரும் ஒரு பிரச்சனையை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பது தான் இந்த பைரி முதல் பாகத்தின் கதை. இரண்டாம் பாகமும் இந்த படத்திற்கு உள்ளது. பைரி என்றால் பந்தய புறாக்களை விரட்டும் பருந்தை குறிக்கும் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.