கேப்மாரி கதை

  கேப்மாரி இயக்குனர் எஸ் எ சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய், வைபவி சாண்டில, அதுல்ய ரவி முன்னனி கதாபாத்திரத்தில் நடிக்கும் காதல், நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படமானது இயக்குனர் எஸ் எ சந்திரசேகரின் 70-வது திரைப்படமாகும். இப்படத்தினை கிறீன் சிக்னல் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சபாபதி தயாரிக்க, இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.

  அடல்ட் நகைச்சுவை படமாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜீவன் ஒளிப்பதிவில் படத்தொகுப்பாளர் ஜி கே பிரசன்னா எடிட்டிங் செய்துள்ளார். கேப்மாரி திரைப்படத்தில் இப்படத்தின் இசையமைப்பாளர் சித்தார்த் விபின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இவருடன் சத்யன், லிவிங்ஸ்டன், பவர் ஸ்டார், தேவதர்ஷினி என பல தமிழ் திரையுலக முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.  கேப்மாரி படத்தின் பிரத்தியேக தகவல்கள்

  அடல்ட் மற்றும் நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ள இப்படத்தினை தமிழ் திரையுலக முன்னணி நடிகரான விஜய்யின் தந்தை இப்படத்தினை இயக்கியுள்ளார். இப்படமானது இவருக்கு தமிழ் திரையுலகில் இவர் இயக்கும் 70வது திரைப்படமாகும். பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களுடன் ஒரு சமுதாயத்திற்கு தேவையான திரைக்கதைகளில் படங்களை இயக்கி வந்துள்ள இவர், இப்படி ஒரு அடல்ட் நகைச்சுவை படமா இயக்குவது என திரைத்துறையில் உள்ள பல முன்னணி பிரபலங்கள் விமர்சித்து வருகின்றனர். இதுவே இப்படத்திற்கு ஒரு ப்ரோமோஷன் பணியாக அமைந்து விட்டது. தற்போது இப்படத்தினை இளைஞர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

  எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் கூறிய தேதிகளில் விளம்பரங்கள் செய்து வந்துள்ள இப்படக்குழு, 2019 டிசம்பர் 6ல் இப்படம் வெளியாகும் என அறிக்கை ஒன்றினை வெளியிட்டனர். ஆனால் அச்சமயம் அதே வாரம் தமிழில் மட்டும் 7 படங்கள் வெளியாவதால் இப்படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைக்காத காரணத்தால் இப்படத்தின் வெளியிட்டு தேதியினை மாற்ற வேண்டும் என இப்படத்தின் விநியோகிஸ்தர்களின் விருப்பத்திற்கு இணங்க இப்படத்தினை 2019 டிசம்பர் 13ல் வெளியிட முடிவெடுத்துள்ளனர் படக்குழுவினர்.

  கேப்மாரி படத்தின் கதை

  ஒரு ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் ஊழியராக பணியாற்றி வரும் ஜெய் தனது சொந்த ஊருக்கு செல்கிறார். இவர் செல்லும் ரயிலில் இவருக்கு எதிர் இருக்கையில் அமர்ந்து வருகிறார் நாயகி வைபவி. அந்த அறையில் இவர்கள் இருவர் மட்டும் பயணித்து வருகிறார்கள். ரயில் பயணத்தில் நடிகர் ஜெய் மது அருந்துவதை பார்த்து, இவருக்கு எதிராக அமர்ந்திருக்கும் நாயகியும் இவருடன் சேர்ந்து மது அருந்துகிறார். போதையில் இவர்கள் இருவரும் எல்லை மீறுகிறார்கள். பின் இருவரும் அவரவர் வீட்டுக்கு சென்று விடுகிறார்கள்.

  சில மாதங்களுக்கு பின்பு சென்னையில் எதிர்பாராமல் இருவரும் சந்திக்கிறார்கள். நண்பர்களாக பழக தொடங்கி சில நாட்கள் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கின்றனர். இவர்களின் திருமண வாழ்க்கை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நன்றாக சென்று கொண்டிருக்கிறது.

  நாயகன் ஜெய் அலுவலகத்தில் பணியாற்றிவரும் அதுல்யா ரவி, இவரின் மேல் ஒரு கண்ணாக இருக்கிறார். திருமணம் ஆனதை அறிந்தும் ஜெய்-யை ஒரு தலையாக காதலித்து வரும் அதுல்யா இவரை அடைய தக்க சமயத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் அதுல்யாவின் இருசக்கர வாகனம் பஞ்சர் அடைகிறது. இதனால் அவரை ஜெய் அதுல்யாவின் வீட்டிற்கு அழைத்து சென்று விடுகிறார்.

  அதுல்யாவின் வீட்டில் இருவரும் மது அருந்துகிறார்கள். பின் இவர்களுக்கும் தவறு நடக்கிறது, பின் சில நாட்களுக்கு பின்னர் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி அதுல்யா ஜெய் வீட்டின் முன் நிற்கிறார். இதனை தொடர்ந்து அதுல்யா மற்றும் வைபவி இருவரும் இதனை சமாளிக்க போராடுகிறார்கள். இருப்பினும் அதுல்யா - ஜெய் - வைபவி அகியோருக்குள் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது, இறுதியில் என நடந்தது? ஜெய் பிரச்சனைகளை எவ்வாறு சமாளித்தார்? எனபதே படத்தின் மீதிக்கதை.
  **Note:Hey! Would you like to share the story of the movie கேப்மாரி with us? Please send it to us (popcorn@oneindia.co.in).