சக்ரா இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ரெஜினா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் என தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை இப்படத்தின் நாயகன் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
அதிரடி மற்றும் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஷமீர் முகமது மற்றும் படதொகுப்பாளர் எஸ் கண்ணன் இணைந்து பணியாற்றியுள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக 2019 நவம்பர் 15ல் இணையத்தில் வெளியானது.
2020ஆம் ஆண்டு கோடைகாலத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம், பல பிரச்சனைகளால் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 19ல் திரையரங்குகளில் வெளியானது. விஷால் நடிப்பில் பிரமாண்ட வெற்றி பெற்ற 'இரும்புத்திரை' படத்தின் பாணியில் இப்படம் உருவாகியுள்ளதால், 'இரும்புத்திரை 2' என திரைப்பட ரசிகர்களால் இத்திரைப்படம் கொண்டாடப்படுகிறது.
சக்ரா திரைப்படத்தின் கதை
கதைக்கரு: சுதந்திரத்தினத்தன்று அதிக பாதுகாப்பில் உள்ள சென்னை நகரத்தில் 50 இடங்களில் தொடர்ச்சியாக கொள்ளையர்களால் கொள்ளையடிக்கின்றனர். இதில் ஒரு ராணுவ அதிகாரியின் இல்லத்தில் உள்ள ராணுவத்தின் உயர் விருதான 'சக்ரா' விருதையும் கொள்ளையடிக்கின்றனர், திருடர்கள். பின் இந்த சம்பவத்தை விசாரணை செய்ய ராணுவத்தின் உயர் அதிகாரியான விஷால் வருகிறார். விசாரணையில் இந்த சம்பவம் திருட்டை தாண்டி தொழில்நுட்ப ரீதியாக பல செய்திகள் வெளியாகிறது. பின் என்ன நடந்து எனபதே படத்தின் கதை.