twitter
    Tamil»Movies»Cobra»Story

    கோப்ரா கதை

    கோப்ரா இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன், இர்பான் பதான் என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கும் கிரைம் - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் லலித் குமார் தனது 'செவன் ஸ்கிறீன் ஸ்டூடியோ' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    அதிரடி - திரில்லர் மற்றும் அறிவியல் புனைவு திரைப்படமாக உருவாகியுள்ள கோப்ரா படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஜான் ஆப்ரஹாம் எடிட்டிங் செய்துள்ளார்.

    கோப்ரா திரைப்படத்திற்கு தமிழக தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் பல போராட்டங்களுக்கு பின்னர் 2022, ஆகஸ்ட் 31ல் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு நேரடியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கோப்ரா படத்தினை தயாரிப்பாளர் லலித் தயாரிக்க, இப்படத்தினை தமிழகம் முழுவதும் தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தன் 'ரெட் கெய்ன்ட் மூவிஸ்' நிறுவனத்தின் மூலம் விநியோகம் செய்துள்ளார்.




    கோப்ரா திரைப்படத்தின் கதை

    ஸ்காட்லாந்தில் ஒரு இளவரசர் கொல்லப்படுகிறார். இந்தியாவில் ஒரு பெரிய அரசியல்வாதி கொல்லப்படுகிறார். இப்படி ஒவ்வொரு நாட்டிலும் ஒரு ஹை புரொஃபைல் கொலைகள் நடைபெறும் நிலையில், அதை கண்டுபிடிக்க இன்டர்போல் அதிகாரியாக அஸ்லான் (இர்ஃபான் பதான்) குற்றவாளியை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். 

    இந்தியாவில் ஒரு சாதாரண கணக்கு வாத்தியாராக வாழ்ந்து கொண்டிருக்கும் மதியழகனை (விக்ரம்) ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி துரத்தி துரத்திக் காதலிக்கிறார். பின் விக்ரம் தான் இந்த கொலைகளை செய்து வருகிறார் என தெரிகிறது. கணக்கு வாத்தியார் ஏன் இதுபோன்ற பெரிய கொலைகளை செய்கிறார் அதற்கு என்ன காரணம் என்பது தான் கோப்ரா படத்தின் கதை.

    கோப்ரா திரைப்படத்தினை பற்றிய பிரத்தியேக தகவல்கள்

    நடிகர் விக்ரம்-ன் திரைவாழ்வில் கோப்ரா திரைப்படமானது விக்ரமின் 58-வது திரைப்படமாகும்,  இப்படத்தின் போஸ்டர் மற்றும் அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக 2019 மே 20ல் இப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

    கன்னட சினிமாவில் இருந்து ஒரு பான் இந்தியா படமாக வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்றுள்ள கே.ஜி.எஃப் திரைப்படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கோப்ரா படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

    இப்படத்தில் மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன், மியா ஜார்ஜ், கே எஸ் ரவிக்குமார் என பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோப்ரா திரைப்படத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் சர்வதேச இந்தியா கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

    கோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 2020 பிப் 28ல் இணையதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து. இப்படத்தில் நடிகர் விக்ரம் 10 வேடங்களில் நடித்துள்ளார், என இந்த படத்தின் ப்ரோமோஷன்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

    டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனது முத்திரை பதித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது தமிழ் திரைப்படமாகும், கோப்ரா.

    இப்படத்தின் பாடல்கள், டிரைலர், டீசர் என இப்படத்தின் வீடியோ மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. 
    **Note:Hey! Would you like to share the story of the movie கோப்ரா with us? Please send it to us ([email protected]).