கே ஜி எஃப் (சேப்டர் 2) கதை

  கே ஜி எஃப் (சேப்டர் 2)  இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுர் தயாரிக்க, இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். 

  அதிரடி படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஒளிப்பதிவாளர் புவன் கௌடா ஒளிப்பதிவு செய்ய, எடிட்டர் ஸ்ரீகாந்த் எடிட்டிங் பணி செய்துள்ளார். இத்திரைப்படமானது 2018ம் ஆண்டு இறுதியில் வெளியான கே ஜி எஃப் (சேப்டர் 1) திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது.


   
   
  கே ஜி எஃப் சாப்டர் 2 திரைப்படத்தின் கதை

  முதல் பாகத்திலேயே அதீரா மற்றும் பிரதமர் ராமிகா சென் கதாபாத்திரங்களுக்கு லீடு கொடுத்திருந்த நிலையில், அந்த இருவரும் ராக்கி பாயை காலி செய்ய போராடும் முயற்சிகள் வென்றதா? இல்லையா? என்பது தான் கே ஜி எஃப் சாப்டர் 2 படத்தின் கதை.
   
  கே ஜி எஃப் (சேப்டர் 2) படத்தின் பிரத்தியேக தகவல்கள்

  கே ஜி எஃப் (சேப்டர் 2)  திரைப்படமானது 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பிற மொழிகளில் டப் செய்து பேன் இந்திய திரைப்படமாக வெளியான கன்னட படத்தின் தொடர்ச்சி ஆகும். கன்னட திரையுலகில் இப்படமே முதன் முதலில் பிற மொழிகளில் டப்பிங்-ல் செய்யப்பட்டு வெளியான திரைப்படமாகும்.

  2018ம் ஆண்டு வெளியான இப்படத்தினை தொடர்ந்து தமிழில் மற்றும் பிற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பேன் இந்திய படமாக பல கன்னட மற்றும் தென்னிந்திய திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. (எ.கா) சாஹோ, லூசிபர், அவனே ஸ்ரீமன் நாராயண ஆகிய திரைப்படங்கள்.

  கே ஜி எஃப் படத்தின் நாயகனான ராக்கி (யஷ்) கதாபாத்திரத்திற்கு பெரியளவில் முக்கியத்துவம் கொண்டுள்ள இந்த திரைக்கதையில், இப்படத்தில் பணியாற்றியுள்ள அணைத்து நடிகர்களுக்கும் கச்சிதமாக பொருந்தக்கூடிய கதாபாத்திரங்களை தேர்ந்தேடுத்து கையாண்டு வெற்றி கண்டுள்ளார் இயக்குனர் பிரஷாந்த் நீல்.

  கே ஜி எஃப் திரைப்படத்தின் இயக்குனரான பிரஷாந்த் நீல் தனது முதல் திரைப்படத்திலிருந்து தொடர்ந்து அதிரடி திரைக்கதை உடைய திரைப்படங்கள் இயக்கி பிரபலமானவர். இப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, மாடலிங் துறையில் 2016 ஆம் ஆண்டில் மிஸ் திவா - மிஸ் சூப்பர்நேஷனல் என பல அமைப்புகளில் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கும் இப்படமே ஒரு அடையாளமாக மாறியுள்ளது.

  இப்படத்தின் காட்சிகள் 70 சதவீதம் முதல் பாகத்தின் பொது படமாக்கப்பட்டுள்ளது. பின்னர் மீதியுள்ள காட்சிகள் பெங்களூரு மற்றும் கர்நாடகாவில் உள்ள சில இடங்களில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பின் பொது சுற்றுசூழல் பாதுகாப்பு என இப்படத்தின் படப்பிடிப்புக்கு பெங்களூரு அரசு தடை விதித்தது. பின்னர் சில காட்சிகளை மைசூர் மற்றும் கோலார் இடங்களில் உருவாக்கியுள்ளனர் படக்குழுவினர்.

  கே ஜி எஃப் (சேப்டர் 2) படத்தின் அறிவிப்புகள்

  இப்படத்தின் இரண்டாம் வில்லனாக கருதப்படும் சூரியவர்மாவின் தம்பியான ஆதிரா கதாபாத்திரத்திற்கு சஞ்சய் தத்தா நடித்துள்ளார். பின்னர் சில முக்கிய கதாபாத்திரத்திற்கு பிரபல முன்னணி திரையுலக நடிகர்கள் நடித்துள்ளனர்.

  இப்படம் 2020ல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகக்கூடும் என படக்குழுவினர் தந்த அறிவிப்பினை தொடர்ந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை 2019 டிசம்பர் 21ல் இணையதள பக்கமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். மேலும் இப்படத்தின் ட்ரைலர் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிட்டுள்ளது படக்குழு, இத்திரைப்படம் உலகம் முழுவதும் 2022 ஏப்ரல் 14ல் வெளியானது.
  **Note:Hey! Would you like to share the story of the movie கே ஜி எஃப் (சேப்டர் 2) with us? Please send it to us (popcorn@oneindia.co.in).