காப்பி வித் காதல் கதை

  காப்பி வித் காதல் - இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், யோகி பாபு, அம்ரிதா ஐயர், சம்யுக்தா, ஐஸ்வர்யா என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் காதல் - நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை சுந்தர் சி - குஷ்பூ இணைந்து 'அவ்னி சினிமேக்ஸ்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

  ஒரு காமெடி கலாட்டாவில் காதல் மற்றும் குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஃபென்னி ஆலிவர் எடிட்டிங் செய்துள்ளார். 

  காப்பி வித் காதல் திரைப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான அவ்னி சினிமேக்ஸ் மற்றும் பென்ஸ்ஸ் மீடியா இணைந்து தயாரிக்க, தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் கெய்ன்ட் மூவிஸ்' நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.

  இப்படத்திற்கு தமிழக தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் 2022 நவம்பர் 4ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
  காப்பி வித் காதல் திரைப்படத்தின் கதை

  கதைக்கரு

  அண்ணன் காதலியை தம்பியும், தம்பி காதலியை அண்ணனும் மாறி மாறி.. திருமணம் செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட அவர்கள் ஜோடிகளை மாற்றி திருமணம் செய்து கொண்டார்களா? இல்லை கடைசியில் என்ன ஆனது என்கிற செம ட்விஸ்ட் உடன் பாலிவுட் ஸ்டைல் கவர்ச்சி படமாக இந்த காபி வித் காதலை இயக்குநர் சுந்தர். சி கொடுத்திருக்கிறார்.

  கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலையில், கொஞ்சம் தாண்டினாலும், (சில இடங்களில் தாண்டுது) கள்ளக் காதல் சீரியல் போலவே படம் மாறியிருக்கும். ஆனால், யார் யாரை காதலிக்கிறார். யாருக்கு யார் ஜோடி. அண்ணன் காதலி தம்பிக்கு மனைவியாகும் சூழல், அந்த பெண்ணுடன் எல்லாம் முடிந்து விட்டது என தம்பியை காப்பாற்ற போராடும் அண்ணன் என இடியாப்ப சிக்கல் கதையில் இப்படம் உருவாகியுள்ளது.

  கதை

  பிரதாப் போத்தனின் மகன்களாக ஸ்ரீகாந்த், ஜீவா மற்றும் ஜெய் நடித்துள்ளனர். மகளாக டிடி நீலகண்டன் நடித்துள்ளார்.

  பிரதாப் போத்தனின் இளைய மகனனான ஜெய்  'பிகில்' அம்ரிதாவை காதலிக்கிறார். ஆனால், ஹோட்டல் பிசினஸில் ஈடுபடும் முயற்சியில் பெரிய இடத்து பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு ஜெய் தள்ளப்படுகிறார். 

  ஜெய் திருமணம் செய்யப் போகும் பெண்ணை பிக்கப் செய்யப் போகும் ஜீவா, அந்த பெண்ணை (மாளவிகா) காதலிக்கத் தொடங்கி விடுகிறார். ஆனால், தம்பியின் கனவுக்காக அந்த பெண்ணை விட்டு விட்டு அப்பா பார்க்கும் இன்னொரு பெண்ணான ரைசா வில்சனை திருமணம் செய்ய ஓகே சொல்கிறார்.

  ஆனால், அதற்கு வேட்டு வைக்கிறார் ஜீவாவின் அண்ணன் ஸ்ரீகாந்த். அவருக்கும் ரைசா வில்சனுக்கும் ஏற்கனவே கசமுசா நடந்து விடுகிறது. இப்படியொரு இடியாப்ப சிக்கல் கதையை கையில் எடுத்துக் கொண்டு அதை எப்படி நீட்டாக கொடுக்க முடியுமோ கொடுக்க முயற்சித்து இருக்கிறார் சுந்தர் சி.
  **Note:Hey! Would you like to share the story of the movie காப்பி வித் காதல் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).