twitter
    Tamil»Movies»Comali»Story

    கோமாளி கதை

    கோமாளி இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம், இத்திரைப்படத்தினை இஷாரி.கே.கணேஷ் தயாரிக்க, இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இசைக்குழு இசையமைத்துள்ளது. மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது 2019-ம் ஆண்டு மே 18ல் வெளியானது.

    இத்திரைப்படத்தின் பிரத்தியேக தகவல்கள்
    இத்திரைப்படமானது ஜெயம் ரவி-யின் நடிப்பில் வெளியாகும் 24வது திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களை ஏற்று நடித்துள்ளாராம். இத்திரைப்பட விளம்பர மற்றும் ப்ரோமோஷன்ஸ் வேளைகளில் 4 வேடங்களே மட்டும் பயன்படுத்தப்படும், மீதியுள்ள 5 வேடங்களை திரைப்படத்தில் சஸ்பென்ஸ் உடன் பாருங்கள் என இப்பட இயக்குனர் கூறியுள்ளார்.

    இத்திரைப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா இசைக்குழு இசையமைக்க, ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இத்திரைப்படத்தின் மூலம் கர்நாடக வடிவழகி மற்றும் திரைப்பட நாயகி சம்யுக்த ஹெட்ஜ் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகிபாபு, கே எஸ் ரவிக்குமார், சம்பத் என பல முன்னணி தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர்.

    கதைக்கரு
    இவ்வுலகில் மனிதன் இயற்கையோடு இணைந்து வாழவதற்காக படைக்கப்பட்டவன். ஆனால் அவனது ஆறாவது அறிவால் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியால் அவன் இயற்கையை இழந்து, வாழ்க்கையை இழைக்கிறான் என்பதை இப்படத்தின் இயக்குனர் நகைச்சுவை திரைக்கதையுடன் கூறியுள்ளார்.

    இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி ஆதிக்கால ஆதிவாசி முதல் இக்கால இளைஞர் வரை ஒன்பது காலகட்ட இளைஞராக நடித்துள்ளார். 



    வசூல்

    இத்திரைப்படம் 2019-ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திரத்தினத்தன்று வெளியாகி மக்கள் மத்தியில் பிரபலமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது திரைப்படத்தின் வசூல் நிலவரத்தை இப்படத்தின் தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இத்திரைப்படம் வெளியாகி 6 தினங்களில் 25 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும், தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என கூறியுள்ளார். பின்னர் கோமாளி படத்தின் நாயகன் ஜெயம் ரவி-யின் திரைவாழ்வில் இதுவரை இல்லாத அளவில் இத்திரைப்படம் அதிக வசூல் செய்யும் என படக்குழுவினரால் எதிர்பார்க்கப்படுகிறது.

    கதை
    1990-காலகட்டங்களில் 90-ஸ் கிட்-ஆகா பிறந்து பள்ளியில் படிக்கும் நாயகன் ஜெயம் ரவி. தனது பள்ளியில் தன்னுடன் படிக்கும் சம்யுக்த ஹெட்ஜ் என்பவரை காதலிக்கிறார். இவர் இவரின் பள்ளி கல்வியை முடித்த நிலையில் எதிர்பாராதவிதமாக ஒரு விபத்தில் சிக்குகிறார், இதனால் கோமா-விற்கு செல்கிறார்.

    கோமா-விற்கு சென்ற ஜெயம் ரவி, 16 வருடங்கள் கழித்து கண்விழிக்கிறார். அப்போது இந்த உலகத்தின் தற்போதைய தொழில்நுட்பம், செயற்கை இயந்திரங்கள், நவீன பொருட்கள் என எல்லாவற்றையும் கண்டு வியப்படைகிறார் நாயகன் ஜெயம் ரவி.

    இதனை சந்தோசத்துடன் ஏற்று மகிழ்ச்சியாய் வாழ தொடங்குகிறார் நாயகன். ஒரு நாள் நாயகி காஜல் அகர்வாலின் மார்டன் உடையை கண்டு வியப்படையும் நாயகன் காஜலிடன் ஒரு பிரச்சனையை கிளப்புகிறார். இவரின் அப்பாவித்தனத்தை கண்டு காதலில் விழுகிறார் நாயகி. ஒரு இடத்திற்கு பாதுகாவலர் பணிக்கு செல்லும் நாயகன், அங்கு நடக்கும் ஒரு தவறுகளை தட்டிக்கேட்கிறார். இதனால் அரசியல்வாதிகளுடன் ஒரு பகையினை வளர்த்துக்கொள்கிறார்.

    ஒரு இயற்க்கையின் சீற்றத்தால் சென்னை மாநகரமே தண்ணீரில் மிதக்கிறது, தண்ணீரில் தத்தவிக்கும் மக்களை மீட்க பலர் போராடிவருகின்றனர். அப்போது 16 வருடங்களுக்கு முன்பு இருந்த சென்னையையும், தற்போதுள்ள சென்னையையும் ஒப்பிட்டு பார்க்கிறார் நாயகன். கடந்த காலத்தில் இருந்து நாம் பாதுகாப்பவை என்ன? நாம் வருங்காலம் என எதனை நோக்கி பயணிக்கிறோம்? என சில சமூக கருத்துகளுடன் சுவாரஸ்யமான திரைக்கதையில் இயக்கியுள்ளார் இயக்குனர்.

    சர்ச்சை
    இத்திரைப்படத்தின் ட்ரைலர் 2019 ஆகஸ்ட் 3-ல் இணையத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இத்திரைப்படத்தின் ட்ரைலரில் ரஜினியின் அரசியலை பற்றி இத்திரைப்படத்தில் படக்குழு நகைச்சுவையாக விமர்சன செய்துள்ளனர். இதனை கண்டித்து ரஜினியின் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் சிலர் படக்குழு மற்றும் இப்படத்தின் நாயகன் ஜெயம் ரவியை விமர்சித்தனர். அதனால் இத்திரைப்படத்தில் ரஜினியை கேலி செய்த காட்சிகள் நீக்கப்படும் என இப்படத்தின் தயாரிப்பாளர் இஷாரி கே கணேஷ் தெரிவித்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie கோமாளி with us? Please send it to us ([email protected]).