கான்ஜூரிங் கண்ணப்பன் - இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஸ், ரெஜினா, நாசர், சரண்யா பொன்வண்ணன் என பல முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கும் நகைச்சுவை - திகில் திரைப்படம். இப்படத்தினை கே ஜி எஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் கல்பாத்தி அர்ச்சனா, கல்பாத்தி சுரேஷ் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
திகில் - திரில்லர் திரைக்கதையை நகைச்சுவையாக ரசிக்க வைத்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எஸ் யுவா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ ராகவ் எடிட்டிங் செய்துள்ளார். பல நகைச்சுவை கலைஞர்களின் நடிப்பில் இப்படம் உருவாகி மக்களை மகிழ்வித்துள்ளது.
கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் 2023 டிசம்பர் 8ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.
கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் கதை
கதைக்கரு: ஒரு இறகின் காரணமாக தன் கனவில் பேய்களிடம் சிக்கும் நாயகன் சதிஷ் அதிலிருந்து எப்படி மீண்டார் என்பதே இப்படத்தின் கதைக்கரு.
கதை - கேமிங் துறையில் அதிக ஆர்வம் கொண்ட சதீஷ், வேலை தேடி வருகிறார். ட்ரீம் கேட்சர் எனப்படும் சூனியம் செய்து வைக்கப்பட்ட ஒரு பொருளை எடுத்து அதில் உள்ள ரெக்கை ஒன்றை எடுத்துவிடுகிறார். இதனால், சதீஷ் எப்போது எப்போதெல்லாம் தூக்கம் வருகிறதோ, அப்போதெல்லாம் கனவு உலகத்தில் பேயிடம் மாட்டிக்கொள்கிறார். பின் தன்னை போலவே தனது குடும்பத்தினரும் அதில் சிக்கிக் கொள்ள கடைசியில் என்ன ஆகிறது என்பது தான் இந்த படத்தின் நகைச்சுவை - திகில் கதை.