X
கனெக்ட்
Drama | Horror | Thriller | 22 Dec 2022 | U/A | 99 Mins
Tamil

கனெக்ட் கதை

கனெக்ட் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திகில் - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் சினிமா இயக்குனரும், தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் தனது "ரௌடி பிக்சர்ஸ்" தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் சத்யராஜ் மற்றும் அனுபம் கெர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திகில் - திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின் எடிட்டிங் செய்துள்ளார்.


இப்படத்தின் இயக்குனரான அஸ்வின் சரவணன் இப்படத்திற்கு முன்பு மாயா (2015), கேம் ஓவர் (2019) மற்றும் இறைவாக்காலம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக புகழ் பெற்றவர்.

கனெக்ட் திரைப்படம் 2022, கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு நேரடியாக திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.


கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் நடக்கக்கூடிய ஒரு சம்பவமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் ஆன்லைன் ஓடிடி உரிமையை 'டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

கனெக்ட் திரைப்படத்தின் கதை

கதைக்கரு

ஒன்லைன் : கொரோனா காலத்தில் தனது மகளுக்கு பிடித்த பேயை எப்படி ஓட்டுகிறார் நயன்தாரா

கதை

கொரோனா காலகட்டத்தில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பலர் தங்களின் இல்லங்களில் தங்கி விடுகின்றனர். நயன்தாரா - வினை ஆகியோருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. மருத்துவராக பணியாற்றும் வினய், கொரோனா காலத்தில் வைத்தியம் செய்ய மருத்துவமனைக்கு சென்று விடுகிறார்.

மருத்துவராக பணிசெய்து வரும் வினய் கொரோனா வைரஸ் தாக்கி இறந்து போகிறார். நயன்தாராவின் குடும்பம் தனி தனியாக ஒவ்வொரு இடத்தில் சிக்கி கொள்கின்றனர். இறந்த அப்பாவுடன் பேச விரும்பும் நயன்தாராவின் மகள் அன்னா, மந்திரவாதி போல சில விஷயங்கள் செய்து பயங்கர ஆவியின் பிடியில் மாட்டிக் கொள்கிறார்.

சத்யராஜ் & அனுபம் கெர் உடன் வீடியோ கால் மூலம் கனெக்ட் ஆகின்றனர். வீடியோ காலில் இவர்களின் அறிவுரையை கேட்டு நயன்தாரா தன் மகளை எப்படி காப்பாற்றுகிறார்? என்பதே இப்படத்தின் கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+